RAJINIKANTH: பேர பிள்ளைகளுடன் சூப்பர் ஸ்டார்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கமான பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.

Advertising
>
Advertising

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த 169வது படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் சென்னையில் துவங்கியது.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் சிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பேரன்களுடன் இருக்கும் புகைப்படத்தை  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பகிர்ந்துள்ளார். பேரன்கள் லிங்கா & யாத்ரா உடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காட்சியளிக்கிறார்.

இந்த புகைப்படத்தை பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த், "இதைவிட அழகான ஒன்றைப் படம் பிடிக்க முடியாது. அப்படிப்பட்ட சில பிணைப்புகளுக்கு தலைப்பிட முடியாது. என் பையன்களுடன் என் பிறந்தநாள் பையன்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth with His grandsons viral photo

People looking for online information on Aishwarya Rajinikanth, Lingaa, Rajinikanth will find this news story useful.