அயோத்தி படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. என்ன சொல்லிருக்கார்னு பாருங்க 😍!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அயோத்தி படம், குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் வெளியான படம்  'அயோத்தி'. மந்திர மூர்த்தி இயக்கத்தில்  கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். என் ஆர் ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார், மாதேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

காசியில் இருந்து ராமேஸ்வரம் வரும் வட இந்திய குடும்பம், எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கும் போது, அந்த வட இந்திய குடும்பத்தின் குடும்ப தலைவி உயிரிழக்கிறார். அந்த இறந்த உடலை காசிக்கு அனுப்ப ராமேஸ்வரத்தை சார்ந்த இஸ்லாமியர் சசிகுமார் கதாபாத்திரம் அப்துல் மாலிக் மேற்கொள்ளும் உதவிகள் அடிப்படையில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.


அயோத்தி படத்தின் வெற்றி விழாவில்  நடிகர் சசிகுமார், இயக்குனர் மந்திர மூர்த்திக்கு தங்க சங்கிலியை பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.  இந்த அயோத்தி திரைப்படம் தற்போது ஜி 5 ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது டிவிட்டர் பக்கத்தில், அயோத்தி படம் பார்த்த பிறகு படம் குறித்தும் நடிகர் சசிகுமார் மற்றும் இயக்குனர் மந்திர மூர்த்தி குறித்தும் ட்வீட் செய்துள்ளார். அதில், "அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப்படம்.

முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!" என ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth tweet about Ayodhi Movie

People looking for online information on Ayodhi, Rajinikanth will find this news story useful.