ரஜினிகாந்த் வீட்டு வாசலில் ஏற்றப்பட்ட இந்திய தேசியக்கொடி! வைரலாகும் புகைப்படங்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வீட்டில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய GLIMPSE.. மறக்குமா நெஞ்சம்!

கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் கடந்த ஆண்டு (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கனிசமான வரவேற்பை பெற்றது. தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த 169வது படத்தை இயக்கும் வாய்ப்பு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுக்கு கிடைத்தது. இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் லுக் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் முதல் சென்னையில் துவங்கி உள்ளது. இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டு வாசலில் மூவர்ண இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து உள்ளார். இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது.‌

இதனை மிகப்பெரிய அளவில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.‌ அசாதி கி அம்ரித் மஹாஉத்சவ் என இந்த நிகழ்வில் 75 வாரங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக குடியரசு தலைவர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

அந்த கூட்டத்தில் சமூக வலைத்தளங்களில் உள்ள இந்தியர்கள் தங்களின் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கவும், ஒவ்வொரு இந்தியர்களின் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதனை முன்னிட்டு  ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தேசிய கொடியை முகப்பு படமாக ஏற்கனவே வைத்துள்ளார். தற்போது தனது போயஸ் கார்டன் வீட்டு வாசலில் மூவர்ண இந்திய தேசியக் கொடியை ஏற்றி உள்ளார். இந்த செயல் தற்போது ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Also Read | BOX OFFICE: இந்தியாவிலும் அமெரிக்காவிலும் செம வசூலை அள்ளும் 'சீதா ராமம்' திரைப்படம்!

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth Poes Garden House Indian national flag

People looking for online information on Rajinikanth, Rajinikanth Poes Garden House, Rajinikanth Poes Garden House Indian national flag, Super Star Rajinikanth will find this news story useful.