ஜெயிலர் படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் அடுத்த 2 படங்கள்.. போட்டோவுடன் வெளியான அப்டேட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.

Advertising
>
Advertising

Also Read | VIDEO: நடிகர் S.J. சூர்யா வாங்கிய புதிய சொகுசு கார்.. விலை இவ்ளோவா? அப்படி என்ன ஸ்பெஷல்?

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த 169வது படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் சென்னையில் துவங்கியது. சென்னை ஆதித்ய ராம் ஸ்டூடியோ, மகாபலிபுரத்தில் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது.

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகிய நத்தம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் இரண்டு புதிய படங்களின் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இது தொடர்பான லைகா நிறுவனத்தின் செய்திக் குறிப்பில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் லைகா உறுதி.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படம் முடிந்த பிறகு லைகா தயாரிப்பில் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்..அதில் ஒரு படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது .இத்தகவலை லைகா தலைமை நிர்வாகி தமிழ் குமரன் தெரிவித்தார்" என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா & தலைமை அதிகாரி தமிழ் குமரன் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Also Read | வாரிசு & துணிவு.. இதற்கு முன் ஒரே சமயத்தில் வெளியான அஜித் - விஜய் படங்கள்..

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth Next Movie update after Jailer sources

People looking for online information on Jailer, Rajinikanth, Rajinikanth Next Movie update, Super Star Rajinikanth will find this news story useful.