சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் புதிய லுக் புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
Also Read | அப்போ இந்தி ரீமேக்-ல கேமியோ Role.. இப்போ இந்தி-ல ஒரு மாஸ் படம்! நெகிழும் அட்லி ரசிகர்கள்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த 169வது படத்தை இயக்கும் வாய்ப்பு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுக்கு கிடைத்தது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் சென்னையில் துவங்கி உள்ளது. இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய தசமியை முன்னிட்டு ரஜினிகாந்த் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் புதிய லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "ஃபில்ட்டர் தேவையில்லை, பொய் எதுவும் இல்லை, குறைபாடற்றது. ஒரு போதும் தவறு செய்ய முடியாத ஒரு சட்டகம்..
ஒருபோதும் தவறான கோணத்தில் இருக்க முடியாத முகம். தந்தை அன்பு ❤️ நேர்மறையான விலைமதிப்பற்ற படம்.. சரியானதும் கூட..
உங்கள் எல்லா நாட்களும் மேற்கண்ட வரியில் கூறப்பட்டுள்ளபடியே இருக்கும் என்று நம்புகிறேன்.
அனைவருக்கும் இனிய விஜய தசமி நல்வாழ்த்துக்கள்
iphone 14 pro max இல் படமாக்கப்பட்டது" என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார் .
இந்த புகைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கருப்பு நிற குறுந்தாடியில் புது லுக்கில் காட்சியளிக்கிறார்.
Also Read | "இவங்க தான் என் அம்மா அப்பா தங்கச்சி".. குடும்பத்தை அறிமுகம் செய்த ராஷ்மிகா மந்தனா!