இரவின் நிழல் படம் பார்த்த ரஜினி.. பார்த்திபனுக்கு தமிழில் எழுதிய விமர்சனக் கடிதம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள இரவின் நிழல் திரைப்படத்தை பார்த்து விட்டு ரஜினிகாந்த் கடிதம் எழுதி உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | பிரபல OTT-யில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்.. வெளியான சூப்பர் தகவல்! வைரல் PHOTOS

இயக்குனர் நடிகர் பார்த்திபன் இயக்கத்தில்  வெளியான ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ மற்றும் ‘ஒத்த செருப்பு’ ஆகிய  திரைப்படங்கள் பரவலாகக் கவனத்தைப் பெற்றன.

ஒத்த செருப்பு படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் நடித்து இயக்கிய திரைப்படம் 'இரவின் நிழல்'.

நான் லீனியர் திரைக்கதையில் ஒரே ஷாட்டில் உருவான இந்தப் படத்தில் பார்த்திபன் நந்து எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த ஜூலை 15 அன்று முதல் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கலைப்புலி தாணு கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரவின் நிழல் திரைப்படம் ரிலீஸூக்கு முன்பே ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்று அங்கீகாரம் பெற்றது.

‘இரவின் நிழல்’ ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் நான் லீனியர் படமாக உருவாகியுள்ளது தான் இதற்கு காரணம்.

இந்நிலையில் இந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த், நடிகர் & இயக்குனர் பார்த்திபனை நேரில் அழைத்து பாராட்டி கடிதம் எழுதி வாழ்த்தியுள்ளார்‌.

அந்த கடிதத்தில் " இரவின் நிழல் திரைப்படத்தை அசாத்திய முயற்சியுடன், ஒரே ஷாட்டில் முழு படத்தையும் எடுத்து அனைவரின் பாராட்டுக்களை பெற்று உலகச் சாதனை படைத்திருக்கும் பார்த்திபன் அவர்களுக்கும், அவருடைய அனைத்து படக்குழுவினருக்கும், மதிப்பிற்குரிய ஏ. ஆர்‌. ரஹ்மான் அவர்களுக்கும், படத்தை ஒளிப்பதிவு செய்த ஆர்தர் வில்சன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்" என ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | அடடே..பிரான்ஸ் நாட்டின் உலகப்புகழ் பெற்ற மியூசியத்தில் பிரியங்கா மோகன்.. வைரல் ஃபோட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth Letter to Iravin Nizhal Cast and Crew

People looking for online information on Iravin nizhal, R parthiban, Radhakrishnan Parthiban, Rajinikanth will find this news story useful.