ரஜினி வீட்டில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்.. தீயாய் பரவும் சூப்பர் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி காந்த் & கமல்ஹாசன் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Advertising
>
Advertising

Also Read | சூரரைப்போற்று இந்தி ரீமேக்.. இதுதான் "மாறன்" கெட்-அப் ஆ? வேற லெவல் BTS போட்டோ..

அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக கமல்ஹாசன் - ரஜினி காந்த் திகழகின்றனர். கடைசியாக ரஜினி அண்ணாத்த படத்தில் நடித்து இருந்தார். விரைவில் தனது அடுத்த படத்தினை சன்பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக துவங்க உள்ளது.

இதே போல கமல் நடித்துள்ள விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது.

இச்சூழலில் ரஜினி காந்தை கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மகேந்திரன் ஆகியோர் போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி செம டிரெண்டாகி வருகின்றது. ரஜினி காந்த் & கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் இந்த சந்திப்பினை கொண்டாடி வருகின்றனர்.

"விக்ரம்" படத்தை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

விக்ரம் படத்தின் வெளியீட்டை ஒட்டி கமல்ஹாசன் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி, மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி, ஐதராபாத் முன் வெளியீட்டு விழா, கோலாலம்பூர் நிகழ்ச்சி, மும்பை முன் வெளியீட்டு விழா என பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். சமீபத்தில் மோகன்லால் உடன் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

Also Read | 'திரௌபதி’ மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் புதிய படம்.. வெளியான மிரட்டலான Title Look!

தொடர்புடைய இணைப்புகள்

Super star Rajinikanth Kamal Haasan Lokesh Meeting Photos went Viral on social media

People looking for online information on Kamal Haasan, Lokesh Kanagaraj, Rajinikanth, Super Star Rajinikanth will find this news story useful.