ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்'.. படக்குழுவில் இணைந்த பிரபல பெண் ஸ்டைலிஸ்ட்! செம

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தில் பிரபல ஸ்டைலிஸ்ட் இணைந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | BIGGBOSS: பிக்பாஸ் சீசன் 6-ல போட்டியாளராக பிரபல கமல் பட நடிகையா? செம்ம தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த 169வது படத்தை இயக்கும் வாய்ப்பு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுக்கு கிடைத்தது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் சென்னையில் துவங்கி உள்ளது. இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தனது கர்ப்ப காலத்தில் நடத்திய போட்டோஷூட் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த போட்டோ ஷூட்டில் ஸ்டைலிஸ்டாக பல்லவி சிங் பணிபுரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் ஆக பல்லவி சிங் பணிபுரிவது உறுதியாகி உள்ளது. பல்லவி சிங் ஏற்கனவே பீஸ்ட் படத்தில் பணிபுரிந்தவர் ஆவார்.

Also Read | கணவர் ரன்பீர் மடியில் அமர்ந்து நடிகை ஆலியா பட் வளைகாப்பு.. வைரலாகும் குடும்ப போட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth Jailer Movie Stylist Pallavi Singh

People looking for online information on Jailer, Jailer Movie Stylist Pallavi Singh, Rajinikanth, Soundarya rajinikanth, Super Star Rajinikanth will find this news story useful.