ரஜினி ரசிகர் மன்ற தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகர் மரணம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.

Advertising
>
Advertising

Also Read | "கொஞ்சம் அவகாசம் கொடுங்க".. தனது ரசிகர்களுக்கு திடீர் அறிக்கை விட்ட KGF நடிகர் யஷ்!

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் சிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். முழு வீச்சில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

ஜெயிலர் படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "லால் சலாம்" படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லால் சலாம் படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்ற தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுதாகர் மரணம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுதாகர், தனது உடல்நிலை மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் செய்யும் மருத்துவ உதவிகள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில், "தலைவர் ரஜினிகாந்தின் அபரிமிதமான நன்மதிப்பைக் குலைப்பதற்காக இணையத்தில் ஒரு பொய்ப் பிரச்சாரம் உலா வருகிறது. இந்த இக்கட்டான காலங்களில் தலைவர் எனக்கு உதவவில்லை என்ற செய்தி முற்றிலும் போலியானது.

உண்மையில் எனது சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்கான கடந்த ஒரு வருட மருத்துவச் செலவு முழுவதையும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர் தலைவர். இப்போது வரை அவர் மட்டுமே நிதி மற்றும் தார்மீக ஆதரவை வழங்குகிறார், அதற்காக எங்கள் முழு குடும்பமும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

எனது சிகிச்சைக்கான நிதி சேகரிக்கும் பிரச்சாரத்தை எனது மகனின் நண்பர்கள் எனக்குத் தெரியாமல், அவர்களால் முடிந்த நிதியுதவியை வழங்குவதற்காக தொடங்கினார்கள். தலைவர் எங்களுக்கு உதவாததால் இது தொடங்கப்பட்டது என்ற செய்தி போலியானது. இது தலைவரின் நல்லெண்ணத்தையும் குணத்தையும் பாதித்துள்ளதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்." என குறிப்பிட்டு இருந்தார்.

Also Read | "எனக்கு இது வேணாம்".. Task-ல் ADK கொடுத்த விருது.. தூக்கி வீசிய அசிம்!!.. Bigg Boss

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth Fans Club Head VM Sudhakar Passed away

People looking for online information on Rajinikanth, Super Star Rajinikanth, Super Star Rajinikanth Fans Club, VM Sudhakar, VM Sudhakar Passed away will find this news story useful.