சூப்பர் சிங்கர் பிரியங்கா நிஜத்தில் டாக்டராம்... மக்களுக்கு எப்படி சேவை செய்கிறார் பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு அறிமுகமே தேவையில்லை. 2006-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வேற லெவல் வரவேற்பு பெற்றதையடுத்து அடுத்தடுத்த சீசன்களாக தற்போது 8-வது சீசன் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி பிரம்மாண்டமாக துவங்கியது. தமிழகத்திலிருந்து சிறந்த திறமையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறது இந்த நிகழ்ச்சியில். அந்த வகையில் இதுவரை இல்லாத அளவில் ஒன்பது மணி நேர தொடர் ஒளிபரப்பாக இந்த நிகழ்ச்சியின் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றுசினிமா துறைக்குள் சென்றவர்கள் ஏராளமானோர். அதிலும் முக்கியமாக இரண்டாம் சீசனில் பங்கெடுத்தவர் பாடகி பிரியங்கா. இவரது 'சின்ன சின்ன வண்ண குயில்'  பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அந்த சீசனில் செமி பைனல்ஸ வரை சென்ற அவர் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பிறகு இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஜிவி பிரகாஷ், யுவன் சங்கர் ராஜா போன்ற பலரது இசையில் பாடி உள்ளார். ஆனால் பலருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால் பிரியங்கா ஒரு பல் மருத்துவர். தற்போது படிப்பை முடித்து விட்டு முதல் நாள் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளார். அந்த புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Super singer priyanka in service as doctor photo சூப்பர் சிங்கர் பிரியங்கா நிஜத்தில் டாக்டராம்

People looking for online information on Priyanka, Super Singer will find this news story useful.