காத்திருந்த ரசிகர்களுக்கு…. பீஸ்ட் படத்தின் OST ரிலீஸ்… சன் பிக்சர்ஸ் கொடுத்த மாஸ் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படம் பற்றி ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த அப்டேட் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "சீரியல் கில்லர் வரும்போது ஒரு copy cat-ம் வருவான்.." - ஜெய், சுந்தர்.C நடிக்கும் ‘பட்டாம்பூச்சி’ Sneak peek

பீஸ்ட்

விஜய்யின் 65 ஆவது படமான பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13 அம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது. இந்த ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக பீஸ்ட் இருந்ததால் திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரமாகக் கொண்டாடி படத்தைப் பார்த்தனர். தமிழகத்தில் சுமார் 800 திரையரங்குகள் வரை இந்த திரைப்படம் வெளியானது.

ரிலீஸுக்குப் பின்

படத்தில் விஜய் வீரராகவன் என்ற உளவுத்துறை அதிகாரியாக நடித்திருந்தார். அவரோடு பூஜா ஹெக்டே ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே, அபர்ணா தாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து இருந்தனர்.  இவர்களோடு முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்திருந்தார். அவர் நடிப்பில் முதலில் வெளியாகும் படமாக பீஸ்ட் அமைந்தது. பேன் இந்தியா திரைப்படமாக 5 மொழிகளில் வெளியான பீஸ்ட் திரைப்படம் நெல்சனின் முந்தைய படங்களைப் போல நகைச்சுவை படமாக இல்லாமல் ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப் பட்டிருந்தது. படம் வெளியான பின்னர் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

பீஸ்ட் OST…

படத்தில் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒரு அம்சமாக அனிருத்தின் இசை அமைந்தது. குறிப்பாக படத்தின் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் படத்தின் முழுமையான பின்னணி இசை எப்போது வெளியாகும் என ஆர்வமாகக் காத்திருந்தனர். இதையடுத்து தற்போது அதனை யுடியூபில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | "Beast- ல நானும் விஜய்யும் மீட் பண்ற Scene… ஆனா" .. விருது விழாவில் செல்வராகவன் சொன்ன Secret

தொடர்புடைய இணைப்புகள்

Sunpictures released Beast movie OST

People looking for online information on Anirudh, Beast Movie, Nelson Dilipkumar, Sun pictures, Vijay will find this news story useful.