BEHINDWOODS விருது மேடையில்.. சிங்கிள்ஸ் சார்பா, சன்னியிடம் கேட்ட கேள்வி.. வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

8 ஆவது Behindwoods Gold Medals விருது நிகழ்ச்சி, மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

Advertising
>
Advertising

Also Read | பிரம்மாண்ட படத்திற்காக விசாகபட்டினத்தில் விசிட் அடித்த ரன்பீர் - ராஜமௌலி.. வைரலாகும் Photo

இரண்டு நாட்களிலும் ஏராளமான பிரபலங்கள், Behindwoods விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வெற்றிமாறன், செல்வராகவன், வெங்கட் பிரபு, எஸ் ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், நெல்சன், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், ஜோனிதா காந்தி, அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள், இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்திருந்தனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் விருதுகளையும் வென்று அசத்தி இருந்தனர். அந்த வகையில், இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன், இசை அமைப்பாளர் அனிருத், நடிகைகள் பிரியங்கா மோகன், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர், விருது வென்றிருந்த வீடியோக்கள், ஏற்கனவே "Behindwoods TV" யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு, மக்கள் மத்தியில் அதிகம் வைரலாகியும் வருகிறது.

"Fighter of the Decade"

இதனைத் தொடர்ந்து, பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் விருது வென்றது தொடர்பான வீடியோக்கள், தற்போது வெளியிடப்பட்டுள்ளது. "Fighter of the Decade" என்னும் விருதினை சன்னி லியோன் வென்றிருந்த நிலையில், இந்த விருதினை நடிகை ஆண்ட்ரியா மற்றும் வசந்த்ராஜ் குரு ஆகியோர் வழங்கி இருந்தனர். விருதினை வென்ற கையுடன் சிறிதாக நடன அசைவையும் மேடையில் செய்தார் சன்னி லியோன்.

ஸ்ரீராம் கூட நடனமாடிய சன்னி

இதன் பின்னர், Micset ஸ்ரீராம், சன்னி லியோனின் தீவிர ரசிகனாக, அனைத்து சிங்கிள் பசங்க சார்பிலும் சன்னி லியோன் முன்பு தோன்றினார். அதே போல, தன்னை தத்தெடுக்க முடியுமா என்றும் ஜாலியாக சன்னியிடம் கேட்டார் ஸ்ரீராம். இதன் பின்னர், சன்னி லியோனுடன் இணைந்து நடனமாடவும் செய்தார் ஸ்ரீராம். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Behindwoods கோல்டு மெடல்ஸ் விருதுகள் மேடையில், விருது வென்றிருந்த சன்னி லியோன், அதே மேடையில் நடனமாடி இருந்த வீடியோவும் விரைவில் வெளியாக உள்ளது.

Also Read | துபாயில் ஸ்கை டைவிங் செய்த பிரபல நடிகை.. "கொஞ்சம் கூட அசராம இருக்காங்களே.." வைரல் வீடியோ

BEHINDWOODS விருது மேடையில்.. சிங்கிள்ஸ் சார்பா, சன்னியிடம் கேட்ட கேள்வி.. வைரல் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sunny leone won award in Behindwoods Gold medals 2022

People looking for online information on Award, Behindwoods Gold Medals 2022, Fighter of the Decade, Sunny Leone will find this news story useful.