BEHINDWOODS விருது நிகழ்வில் சன்னி லியோன்.. "வாங்க ஜாலியோ ஜிம்கானா ஆக்கலாம்".. எப்போ? எங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றிகரமான,  Behindwoods Gold Medals விருது நிகழ்வுக்கு திரைத்துறை மற்றும் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது.

Advertising
>
Advertising

இதுவரை கமல்ஹாசன், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான், நயன்தாரா, இயக்குனர் ஷங்கர், இயக்குனர் ராஜமவுலி, சமந்தா, அனுஷ்கா ஷெட்டி, ராஷ்மிகா என ஏராளாமான திரைப் பிரபலங்கள், இந்த விருது மேடையில் கால் பதித்துள்ளனர்.

அந்த வகையில், 8 ஆவது Behindwoods Gold Medals விருது நிகழ்வு, சென்னை தீவுத்திடலில் உள்ள Island மைதானத்தில், வரும் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில், மாலை 6 மணி முதல் இரவு 11:30 மணி வரை நடைபெறவுள்ளது.

Behindwoods கோல்டு மெடல் விருது நிகழ்வில் சன்னி லியோன்..
 
இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த முறை எந்தெந்த பிரபலங்கள் விருது நிகழ்வுக்கு வருகை தருகின்றனர் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் 8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் நிகழ்ச்சியில் வரும் 15 ஆம் தேதி பங்கேற்கவுள்ளார்.

சன்னி லியோன் பங்கேற்கவுள்ளதால், ரசிகர்கள் பலரும் அவரை பிஹைண்ட்வுட்ஸ் விழாவில் காணும் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த தகவலை சன்னி லியோன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, "வணக்கம் சென்னை. 8 ஆவது Behindwoods Gold Medals விருது நிகழ்வில் உங்கள் அனைவரையும் சந்திக்கவுள்ளத்தில் மகிழ்ச்சி அடைகிறேன்" என குறிப்பிட்டு, விருது நிகழ்ச்சி நடைபெறுவது பற்றிய விவரத்தையும் இணைத்துள்ளார்.



8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

 

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

BEHINDWOODS விருது நிகழ்வில் சன்னி லியோன்.. "வாங்க ஜாலியோ ஜிம்கானா ஆக்கலாம்".. எப்போ? எங்க? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sunny leone to attend 8th behindwoods gold medals awards

People looking for online information on 8 TH BGM Awards, Behindoods Gold Medals Awards, Sunny Leone will find this news story useful.