கவர்ச்சி நடிகையாக பிரபலமான சன்னி லியோன் இப்போது வெகுமக்களுக்கான படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
அப்படித்தான் மலையாளத்தில் உருவாகவிருக்கும் `ஷூரோ' படத்தில் சன்னி நடிக்கிறார். `மார்கம் களி', `குட்டனாடன் மரப்பா' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்ரீஜித் விஜயன் இந்தப் படத்தை இயக்குகிறார். முழுக்க முழுக்க ஒரு சைக்கலாஜிகல் த்ரில்லர் படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் துவங்குகிறது.
இதற்காக 10 நாட்கள் நடிப்புக்கு வொர்க்ஷாப் நடப்பதாகவும், தற்போது இந்திப் படமொன்றில் நடிக்கும் சன்னி லியோன் அந்த படத்தை முடித்துவிட்டு, இந்த படத்துக்கான வொர்க்ஷாப்பில் இணையவுள்ளதாகவும் இப்படத்தின் இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். இந்த பட விழாவில் பேசிய சன்னி லியோன் தென்னிந்தியாவில் தான் தனக்கு இத்தனை அன்பு என பேசியுள்ளார்.
இந்த படத்தின் அறிமுக விழாவில் இந்த படத்தின் கதை பற்றி பேசிய சன்னி லியோன், இந்த படத்தை சிறந்த படமாக்குவதற்காக இத்தனை அன்புடன் கூடியிருக்கும் அனைவரின் அன்புக்கும் நன்றி தெரிவித்தார். அத்துடன் தனக்கு மலையாளிகள் மீது பயங்கர இஷ்டம் என்று மலையாளத்தில் சொல்லித்தந்ததை பேசி ரசிகர்களை மகிழ்வித்தார்.