பாலிவுட் திரைப்படங்கள் மூலம் நடிக்க வந்து, இன்று இந்தியா முழுவதும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துக் கொண்டுள்ளவர் நடிகை சன்னி லியோன்.

RRR FDFS: படம் எப்படி இருக்கு? தெறிக்க விடும் public கமெண்ட்ஸ்.. வீடியோ!
ஹிந்தி திரைப்படங்கள் மூலம் தனது திரை பயணத்தை சன்னி லியோன் ஆரம்பித்தாலும், இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும், சன்னி லியோன் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அது மட்டுமில்லாமல், சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில், ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியும் வருகிறார்.
சன்னியின் நல்ல குணம்
டேனியல் வெபர் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட சன்னி லியோன், ஒரு பெண் குழந்தையும் தத்தெடுத்து வளர்த்து வரும் நிலையில், வாடகைத் தாய் மூலம், இரட்டைக் குழந்தைகளையும் பெற்று வளர்த்து வருகிறார். கவர்ச்சி என்பதற்கு சன்னி லியோன் பெயர் போனாலும், அவரது நல்ல குணத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
திரைப்படங்களில் 'செம' பிசி
தனக்கு கிடைத்த புகழ் காரணமாக, எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கு வேண்டி, இந்தியாவின் எந்த மாநிலத்தில் சன்னி லியோன் சென்றாலும், அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். சன்னி லியோன் தற்போது முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'OMG'மற்றும் 'ஷீரோ' ஆகிய படங்களின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.
முழுக்க முழுக்க அப்டேட்டுகள்
இது தவிர, வேறு சில படங்களிலும் கமிட்டாகி, தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் தீவிரமாக இருந்து வருகிறார் சன்னி லியோன். எந்த அளவுக்கு பிசியாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும், தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களிலும் அப்டேட்டுகளை ரசிகர்களுக்கு கொடுக்க சன்னி லியோன் தவறுவதில்லை.
மாலத்தீவுக்கு சுற்றுலா
தன்னுடைய திரைப்படங்கள் பற்றிய அப்டேட்டுகள், போட்டோஷூட், விடுமுறையை கழிக்கும் புகைப்படங்கள் என எப்போதும் சன்னி லியோனின் இன்ஸ்டாகிராம் பக்கம் நிரம்பி வழியும். அந்த வகையில், கோடை விடுமுறைக்கு வேண்டி மாலத்தீவு சென்றுள்ள சன்னி லியோன், கடந்த சில தினங்களாக, பிகினி உடையில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், ரசிகர்களை கிறங்கடிக்கச் செய்து வருகிறது.
கடல் நீரில் துள்ளி ஓடும் சன்னி
அந்த வகையில், தற்போது கடல் நீரில், பிகினி உடையில் சன்னி லியோன் ஓடி வரும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அது மட்டுமில்லாமல், சில போஸ் தொடர்பான வீடியோக்களும் இடம்பெற்று, ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்து வருகிறது.
தமிழ் சினிமாவின் பெஸ்ட் முத்தக் காட்சி இதுதான்… அசோக் செல்வன் open talk பேட்டி!