சன்னி லியோன் உடன் G.P. முத்துவும் நடித்த OH MY GHOST.. ரிலீஸ் எப்போ? செம்ம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் திரைப்படங்களில் நடித்து இந்தியா முழுவதும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துக் கொண்டுள்ளவர் நடிகை சன்னி லியோன்.

Advertising
>
Advertising

Also Read | "விஜய்யின் 'வாரிசு'.. கூடுதல் தியேட்டர் வேணும்".. உதயநிதியை சந்திக்கும் தில் ராஜூ?

ஹிந்தி திரைப்படங்கள் மூலம் தனது திரை பயணத்தை சன்னி லியோன் ஆரம்பித்தாலும், இன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும், சன்னி லியோன் கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டுமில்லாமல், சில திரைப்படங்களில், ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியும் வருகிறார்.

டேனியல் வெபர் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட சன்னி லியோன், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் நிலையில், வாடகைத் தாய் மூலம்,  இரட்டைக் குழந்தைகளையும் பெற்று வளர்த்து வருகிறார்.

தனக்கு கிடைத்த புகழ் காரணமாக, எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கு, இந்தியாவின் எந்த மாநிலத்தில் சன்னி லியோன் சென்றாலும், அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். சன்னி லியோன் தற்போது முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'OMG' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஓ மை கோஸ்ட்”   (OMG) திரைப்படத்தினை  VAU MEDIA ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர் D.வீரா சக்தி மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை, ஜி.பி. முத்து மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக சன்னி லியோனின் பிரத்யேக வடிவமைப்பு போஸ்டருடன் படநிறுவனம் அறிவித்துள்ளது.

Also Read | "ஒரு படமே எடுத்தேன்".. சீட்டாட்டம் & ஆன்லைன் ரம்மி குறித்து நடிகர் ராஜ்கிரண் பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Sunny leone GP Muthu OMG Release Date Announced

People looking for online information on GP MUTHU, OMG Release Update, Sunny Leone will find this news story useful.