பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தான் வரைந்த ஓவியத்தை ஏலம் விட்டு நிதி திரட்டுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவிற்காக தானே கைப்பட வரைந்த ஓவியத்தை ஏலத்திற்கு விட்டு, அதன் மூலம் வரும் நிதியை மருத்துவமனைக்கு கொடுக்கவிருப்பதாக சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், ‘முடிந்தது..! கேன்சருக்காக இதனை ஏலம்விட்டு நிதி திரட்டப் போகிறேன். நம்மை விட்டு பிரிந்தவர்களின் அன்பான நினைவுகளுடன் இதனை வரைந்திருக்கிறேன். ஒவ்வொரு தீட்டளிலும் எந்த அளவிற்கு உங்களை நினைத்திருக்கிறேன். உங்களை எந்த அளவிற்கு மிஸ் செய்கிறேன் என்பதை உணர்ந்தேன்” என ட்வீட் செய்துள்ளார்.
சன்னி லியோனின் தந்தை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2010ம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக சன்னி லியோன் இதனை செய்துள்ளார்.
இறுதியாக பாலிவுட்டில் ‘அர்ஜுன் பாட்டியாலா’ படத்தில் நடித்த சன்னி லியோன் தற்போது தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்ற சரித்திர கால வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார்.