SUNNY LEONE : தன்னுடன் ஃபோட்டோ எடுத்துக்கொண்டபோது உருகி அழுத ரசிகை.! எமோஷனல் ஆன சன்னி லியோன்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன்னி லியோன் நடிக்கும் ஹாரர் காமெடி  திரைப்படம்  “ஓ மை கோஸ்ட்” (OMG). VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS  சார்பில்  D.வீரா சக்தி & K. சசிகுமார் வழங்கும், இந்த படம் தற்போது வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | உயிரோடதான் இருக்கேன்..! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. 90S ‘பாட்டுக்கு பாட்டு’ BH அப்துல் ஹமீத்

இப்படத்தில் சன்னி லியோனுடன் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை, ஜி.பி.முத்து ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தரன் குமார் பினணி இசையமைக்கிறார். தீபக் D.மேனன்  இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சேன்லில் ரசிகர்கள் முன்னிலையில் பிரத்தியேக நேர்காணலில் பங்குபெற்ற சன்னி லியோன், பல்வேறு சுவாரஸ்ய கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். இதில், “நீங்கள் மிகவும் துணிவானவராக இருக்க வேண்டும். ஏனென்றால் பல சமயம், உங்களை நோக்கி வரும் பல கேள்விகளுக்கு நேரடியாக யாரிடமும் பதில் அளிக்கிறீர்கள். உங்களோட பேச்சுக்கு எப்படி தயாராகீறீர்கள்?” என கேட்கப்பட்டபோது,  “நான் அப்படியான சூழலில் உண்மையிலேயே பயந்திருக்கிறேன். வித்தியாசமாக ஏதாவது கேட்டால், என் பதிலும் அப்படியே இருக்கும்.

சில நேரங்களில் நகைச்சுவையான ஜோக்குகளை நான் விரும்பியிருக்கிறேன். அது எனக்கும் பிடிக்கும். ஆனால் அந்த விஷயம் வேடிக்கையாக இருக்கும்.  நம்ம வாழ்க்கையே வேடிக்கையும் ஈடுபாடும் நிறைந்தது தான். நம்ம வாழ்க்கையில நிறைய நகைச்சுவை இருக்கும். என்ன வச்சே வேடிக்கையான விஷயங்களை செய்யலாம். அதற்காக வேண்டும் என்றே தேவையற்ற நகைச்சுவைகளை செய்ய வேண்டியதில்லை. என் வாழ்க்கையிலும் வேடிக்கையான நிகழ்வுகள் நடக்கும்.” என கூறினார்.

அப்போது, “உங்க வாழ்க்கையில் நடந்த மிக வேடிக்கையான நிகழ்வை பகிருங்களேன்.” என கேட்கப்பட்டது.  இதற்கு பதில் அளித்த சன்னி லியோன், “ஒரு பெண் ரசிகர் தென்னிந்தியாவில் இருந்து வந்திருந்தார். எந்த ஊரென நினைவில்லை. அவர் என்னை கண்டதும் கண்ணீர் விட்டு அழுதார். அழுகையை நிறுத்த முடியவில்லை. எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரே நாங்கள் அவருக்கு ஹாப்பி பர்த்டே பாட ஆரம்பித்து விட்டோம். வேறென்ன செய்ய? ஏனென்றால் நானும் கொஞ்சம் வேடிக்கையானவர் தான்.” என குறிப்பிட்டார்.

அப்போது கூட்டத்தில் இருந்து ரசிகர்க ஒருவர், “மேடம்.. நீங்கள் அழுதீர்களா?” என கேட்க, அதற்கு சன்னி லியோன், “ஐ லவ் யூ.. நான் அழவில்லை. வேறொருவர் அழுதார். நீங்கள் அழாதீர்கள்.” என குறிப்பிட்டார். அப்போது அரங்கு கலகலப்பாக மாறியது.

Also Read | VIDEO : AR ரஹ்மான் & AR அமீன் பர்த்டே.. தெறி Beat-உடன் வாழ்த்திய ட்ரம்ஸ் சிவமணி!

SUNNY LEONE : தன்னுடன் ஃபோட்டோ எடுத்துக்கொண்டபோது உருகி அழுத ரசிகை.! எமோஷனல் ஆன சன்னி லியோன்.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sunny Leone about a fan who cried while taking pic

People looking for online information on Sunny Leone will find this news story useful.