சன்.டி.வியில் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் சுந்தரி. தோற்றத்தில் அழகாய் இல்லை என ஃபீல் பண்ணும் சராசரி பெண்ணின் வாழ்க்கைப் போராட்டம் பற்றிய இந்த கதை உண்மையில் எது எழகு? என தன்னம்பிக்கையை தரும் விதமாக எடுத்துச் செல்லப்படும் என தெரிகிறது. இந்த தொடரில் சுந்தரியாக நடிக்கும் நாயகி கேப்ரியல்லா பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.
ஐரா படத்தில் நடித்த கேப்ரியலா, அந்த பட வாய்ப்பு தனது ஸ்கின் டோன்க்காக தான் வந்தாதாகவும், தனது கலர் தான் தனது கனவை நிறைவேற்றியது என்று குறிப்பிட்டுள்ளார். டஸ்கி ஸ்கின் உடைய பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருப்பதை குறிப்பிட்ட கேப்ரியல்லா எல்லா வாய்ப்புகளும் ரிஜக்ட் ஆகுதேனு ஒரு கட்டத்துக்கு மேல் துணிச்சலாக நம்பிக்கையின் பேரில் எடுத்த முடிவுதான் சுந்தரி வாய்ப்பு என்றும் தெரிவிக்கிறார்.
தன்னைப் போலவே பலரும் கடந்துவந்த இந்த மனநிலையைதான் இப்போது கதாபாத்திரங்கள் மூலம் பிரதிபலிப்பதாகவும், இந்த போராட்டத்தை நாம் சந்தித்தாலும், நாம் அழகு என்றும் நாம் முதலில் நம்ப வேண்டும் என்றும் கேப்ரியல்லா தெரிவித்துள்ளார். ஒளிப்பதிவாளரை திருமணம் செய்துள்ள கேப்ரியல்லா தனது கணவர் தனது கனவுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாகவும் நெகிழ்கிறார்.
ALSO READ: "லவ் யூ புருஷா".. இயக்குநருடன் கல்யாணம் ஆன கையோடு 'இப்படி ஒரு நாளை' கொண்டாடிய நடிகை!
மேலும் ரியாலிட்டி ஷோவில் எலிமினேட் ஆனது, குறும்படங்களில் கிடைத்த அங்கீகாரங்கள், ரிஜக்ட் ஆன படவாய்ப்புகள் என பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ள முழு காணொளி பேட்டியை இணைப்பில் காணலாம்.