MICHAEL : சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, GVM -ன் மைக்கேல்.. வெளியான OFFICIAL ரிலீஸ் அப்டேட்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும், பான் இந்திய படம் “மைக்கேல்”.

Advertising
>
Advertising

Also Read | Varisu : தணிக்கையில் கிடைத்த ரிசல்ட் என்ன..?!.. வாரிசு படத்தின் சென்சார் அப்டேட்!!..

பன்மொழி இந்திய திரைப்படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன்சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனங்கள்  இணைந்து மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றன.

இப்படத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன் ஆகியோருடன் திவ்யான்ஷா கௌஷிக், வரலக்‌ஷ்மி சரத்குமார், வருண் சந்தீஷ்,  அனுசிய பரத்வாஜ் ஆகியோர் இணைந்துள்ளனர்.  சாம் CS இசையமைக்கும் இந்த படத்துக்கு கிரன் கௌஷிக் ஒளிப்பதிவு செய்ய,  திருப்பூரனேனி கல்யாண் சக்ரவர்த்தி, ராஜன் ராதமணாளன் மற்றும் ரஞ்சித் ஜெயக்கொடி இணைந்து வசனம் எழுதுகின்றனர். 

ஏற்கனவே வெளியாகியிருந்த இப்படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் அண்மையில் சித் ஸ்ரீராம் குரலில் தெலுங்கில் வெளியான ‘Neevuntey Chaalu’ எனும் முதல் பாடல்  அனைத்துமே ரசிகர்களிடையே வைரலாகின. இந்நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி உலகெங்கும் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரும் மிரட்டலான லுக்குடன் வெளியிடப்பட்டுள்ளது.

Also Read | “நான் பார்க்கும்போது இதான் போய்ட்டு இருந்தது” பிக்பாஸ் தமிழ் குறித்து சன்னி லியோன்.. Bigg Boss 6

தொடர்புடைய இணைப்புகள்

Sundeep kishan vijay sethupathi GVM Starring MICHAEL Release date

People looking for online information on GVM MICHAEL, Sundeep Kishan, Vijay Sethupathi will find this news story useful.