சன் டிவியில் கேப்ரியல்லா நடிக்கும் சுந்தரி சீரியலில் கொஞ்ச நாட்களாகவே சுந்தரி காணாமல் போனதாக காட்சிகள் வந்தன. உண்மையில் கேப்ரியல்லா கொரோனா பாதித்து மீண்டு வந்ததாக சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வந்தார்.
இன்னொரு புறம் சீரியலில் சுந்தரியை தேடி அலையும் போலீஸ், சுந்தரி அவ்வப்போது போன் செய்த STD பூத்தை கண்டுபிடித்து அங்கு சென்று சுந்தரி போட்டோவை காட்டி எஸ்டிடி முதலாளியிடம் விசாரித்தும் பலன் இல்லை. ஆனால் அங்கு வேலை செய்யும் பையன் சுந்தரி தினமும் வருவதாகக் கூற, அன்றும் சுந்தரி போன் செய்ய வந்ததும் கடையில் இருக்கும் பையன் உடனடியாக போலீசுக்கு தகவல் சொல்கிறான்.
உடனே போலீஸ் அங்கு கிளம்பி செல்ல, அதற்குள் சுந்தரியை வேறு இடத்திற்கு மாற்றுகிறார் கார்த்திக். அத்துடன் சுந்தரியை போலீஸ் கண்டுபிடித்துவிட கூடாது என்று சுந்தரியிடம் தான் சொல்லும் டாக்ஸி ஒன்றில் ஏறி செல்ல சொல்கிறார். சுந்தரியும் அவ்வாறே செய்துள்ளார். இப்படியாக பழைய எபிசோட்களில் சுந்தரி பெரும்பாலும் தோன்றாமல் இருந்த நிலையில் தற்போது ஒரு புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில், இனி தான் வரவிருப்பதாகவும், சுந்தரி எங்கே போனாள்? ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? சுந்தரிக்கு என்ன நடந்தது? என்பதையெல்லாம் சொல்லவிருப்பதாகவும், கூறி, “நான் திரும்பி வந்துட்டேன்” என்று கெத்தாக பேசுகிறார் சுந்தரி கேப்ரியல்லா. ஜூன் 21 திங்கள் கிழமை முதல் இந்த விஷயங்கள் ரிவீல் ஆகும் என தெரிகிறது.