கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படத்தின் ரிமேக் உரிமையை இயக்குநர் சுந்தர்.சி வாங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சுந்தர்.சி. இவர் கடைசியாக விஷால் நடிப்பில் ஆக்ஷன் திரைப்படத்தை இயக்கினார். இதை தொடர்ந்து, ஆர்யா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் அரண்மனை-3 படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது இயக்குநர் சுந்தர்.சியின் அவ்னி சினிமாக்ஸ் கம்பனி, கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த மாயா பஜார் திரைப்படத்தின் ரிமேக் உரிமையை வாங்கியுள்ளது. சுந்தர்.சியின் இணை இயக்குநரான பத்ரி இயக்கும் இத்திரைப்படத்தில் நடிகர்கள் பிரசன்னா, ஷாம், மங்காத்தா அஷ்வின், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கவுள்ளார்களாம். விரைவில் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Tags : Sundar C, Shaam, Prasanna, Ashwin Kakumanu, Yogi Babu, Mayabazzar