ஜெய் நடிப்பில் மிரட்டலான த்ரில்லர்….. வைரலாகும் ’பட்டாம்பூச்சி’ MOTION POSTER!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெய் மற்றும் சுந்தர் சி நடிக்கும் பட்டாம்பூச்சி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertising
>
Advertising

இயக்கமும் நடிப்பும்…

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. ரஜினி, கமல், அஜித் என முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். இடையில் நடிகராகவும் வலம் வந்த அவர் இப்போது நடிப்பு மற்றும் இயக்கம் என இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

Turning point தலைநகரம்…

முன்னணி இயக்குனராக இருந்த நேரத்தில் தன்னுடைய உதவியாளர் சுராஜ் இயக்கத்தில் உருவான தலைநகரம் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார் சுந்தர் சி. அந்த படத்தின் திரைக்கதை காரணமாகவும், வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பாலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது அந்த படம். அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். இதனால் சில வருடங்களுக்கு இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகியிருந்தார்.

மீண்டும் இயக்கம்…

இதையடுத்து அவர் சில் ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இயக்கிய கலகலப்பு படம் வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் இயக்கத்தில் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன் பின்னர் பல படங்களை வரிசையாக இயக்கி வருகிறார். இந்நிலையில் இப்போது  இயக்கம், நடிப்பு என இரண்டிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

பட்டாம்பூச்சி மோஷன் போஸ்டர்…

தற்போது அவரும் ஜெய்யும் நடிக்கும் பட்டாம்பூச்சி என்ற படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த போஸ்டரில் சுந்தர் சி போலீஸ் வேடத்தில் இருக்க, ஜெய் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. போஸ்டரின் இறுதியில் இருவரும் மோதிக்கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சுந்தர் சி யின் உதவியாளரான பத்ரி இயக்கியுள்ளார். வழக்கமாக காமெடி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சுந்தர் சி திரில்லர் ஜானரில் இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மே மாதம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கவனம் ஈர்த்த ஜெய்…

இந்த படத்தில் ஜெய் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிப்பது போல தெரிகிறது. பகவதி படத்தின் மூலம் அறிமுகமான ஜெய் சென்னை 28, சுப்ரமண்யபுரம், எங்கேயும் எப்போது போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி நடிகரானார். ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 2 மற்றும் தற்போது பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்துள்ளார். இருவரும் இணைந்து நடிக்கும் பட்டாம்பூச்சி திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Sundar c jai pattaampoochi thriller motion poster

People looking for online information on Jai, Pattaampoochi, Sundar C will find this news story useful.