COFFEE WITH KADHAL : "சுந்தர்.சி-யின் நீண்ட நாள் ஆசை இதுவா?".. படவிழாவில் அவரே போட்டுடைத்த விஷயம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் 'காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | PS1 : ஒரே Frame-ல ஆதித்ய கரிகாலன்.. வந்தியத்தேவன்.. அருண் மொழிவர்மன்..? .. நாவல்ல அப்படி வராதா?

மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தமிழகமெங்கும் இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.. வரும் அக்-7ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது..

இந்நிகழ்வில் இயக்குனர் சுந்தர்.சி பேசும்போது, “நீண்ட நாட்களாகவே ஃபீல்குட் படம் ஒன்றை இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.. படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் படம் முழுவதும் ஒரு புன்சிரிப்புடன் படத்தை பார்க்க வேண்டும் என நினைத்தேன். உள்ளத்தை அள்ளித்தா படத்தை அப்படித்தான் துவங்கினேன். அதில் முதலில் நக்மா தான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. பின் கதை வேறு விதமாக மாறிவிட்டது. அதற்கடுத்ததாக தீயா வேலை செய்யணும் குமாரு படத்தையும் அதேபோல் பீல்குட் படமாக எடுக்கவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால் சந்தானம் வந்ததும் படத்தின் ரூட்டே மாறிவிட்டது இந்த முறை காபி வித் காதலில் படத்தில் என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது.

ஊட்டி என்பது எல்லோருக்கும் சுற்றுலா தளம் என்றால் எனக்கு மட்டும் அது வேலை பார்க்கும் இடம் என்பது போல மாறிவிட்டது. மூன்று விதமான குணாதிசயங்களுடன் உள்ள மூன்று சகோதரர்கள், அவர்களுக்கு இடையே ஏற்படும் காதல் மற்றும் குடும்ப பிரச்சினை ஆகியவடரை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் ஆறு கதாநாயகிகள் நடித்துள்ளனர். நடிகர் யோகிபாபுவுக்கு இதில் ஸ்டைலிஷான கதாபாத்திரம். இந்த மூன்று கதாநாயக\ர்களில் தீயா வேலை செய்யணும் குமாரு என்று சொல்ல வேண்டுமென்றால் ஜீவாவை சொல்லலாம்.

இதுவரை நான் பணியாற்றிய நடிகைகளிலேயே சவாலான நடிகை என்றால் அது சம்யுக்தா தான். இந்த படத்தில் அவர் கண் சிமிட்டாமல் நடிக்க வேண்டிய ஒரு காட்சியை படமாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதேபோல ரைசாவை பார்க்கும்போது யாரிடமோ அட்ரஸ் கேட்டு வந்தவர் போல காட்சியளிப்பார். ஆனால் கேமரா முன் வந்துவிட்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அம்ரிதாவை பொருத்தவரை நம்மை விட இன்னொரு நடிகைக்கு அதிக காட்சிகள் கொடுக்கிறார்களோ என்கிற எண்ணம் ஓடிக்கொண்டே இருப்பது போல எந்நேரமும் ஒரு சந்தேகத்திலேயே இருப்பார்

அதேபோல ஆக்சன் படத்தில் ஹீரோக்களுக்கு அடிபடுவது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆனால் ரொமாண்டிக் படத்தின் கதாநாயகி அடிபடுவது என்பது புதுசாகத்தான் இருக்கும் அது வேறு யாருமல்ல மாளவிகா சர்மா தான் டேமேஜ் ஹீரோயின் என்று கூட சொல்லலாம், அவர் ஒரு நாள் இருந்தாலும் கூட அதுபற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். இந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்களில் முக்கியமாக இடம் பெற்றுள்ள அந்த குழந்தை நட்சத்திரம் தான் படத்தின் திருப்புமுனை கதாபாத்திரம். நானும் யோகிபாபு பேசிக்கொள்ளும்போது கூட அந்த, ‘குழந்தையின் அப்பா அம்மா நமக்காகவே பெற்றுவிட்டு இருக்காங்களோ’ என்று பேசிக்கொள்வோம்.

படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையும் இணைக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் டிடி. அவர் கதாபாத்திரத்தை மட்டும் எழுதும்போது டிடியை தவிர வேறு யாரையும் யோசிக்கவில்லை. காலில் அடிபட்டு இருந்த நிலையிலும் கூட கஷ்டப்பட்டு நடனமாடினார்” என்றார்.

Also Read | PS1 : "பொன்னியின் செல்வன் மாதிரிதான் நானும்." தீயார் பரவும் வந்தியத்தேவன் - பூங்குழலி Template.!

தொடர்புடைய இணைப்புகள்

Sundar C family entertainer movie Coffee With Kadhal Audio Launch

People looking for online information on Coffee with kadhal, Coffee With Kadhal Audio Launch, Sundar C will find this news story useful.