"இந்த குடும்பத்துல கல்யாணம் ஆகுறதுக்குள்ள சிம்பு & விஷாலுக்கே கல்யாணம் ஆகிடும்".. COFFEE WITH KAADHAL TRAILER

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள காஃபி வித் காதல் திரைப்படத்தின்  டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கமல்ஹாசன் நிறுவனத்தின் கதர் உடையில் ராஷ்மிகா மந்தனா.. வைரலாகும் புதிய படத்தின் சூப்பர் PHOTOSHOOT!

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் 'காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தமிழகமெங்கும் இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.. வரும் அக்-7ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

படக்குழுவினருடன் புதிய நீதிக்கட்சி தலைவரும் இந்தப்படத்தின் தயாரிப்பாளருமான ஏ,சி.சண்முகம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி, இயக்குனர் பேரரசு, கவிஞர் சினேகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று சகோதரர்கள் அவர்களுக்குள் ஒத்துப்போகாத வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறார்கள் . இசையமைப்பாளராக ஒருவர், ஐ டி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர் , சமையல் வேலையில் ஆர்வம் உடைய ஒருவர். அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்த படத்தை சுந்தர்.சி இயக்கி முடித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீஸ் ஆகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி மற்றும் ரொமான்ஸ் ததும்பும் காட்சிகளுடன் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. படத்தில் நடித்துள்ள பிரதான கதாபாத்திரத்திரங்கள் டிரெய்லரில் தோன்றியுள்ளனர். யோகி பாபு பேசும் வசனங்கள் டிரெய்லரில் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன.

இந்த படத்தில் கிருஷ்ண சாமி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ஆலிவர் எடிட்டராக பணிபுரிகிறார்.

Also Read | குடும்பத்துடன் கொட்டும் அருவியில் சாய் பல்லவி..அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய வைரல் வீடியோ

"இந்த குடும்பத்துல கல்யாணம் ஆகுறதுக்குள்ள சிம்பு & விஷாலுக்கே கல்யாணம் ஆகிடும்".. COFFEE WITH KAADHAL TRAILER வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sundar C Coffee with Kaadhal Movie Trailer Released

People looking for online information on Coffee with kaadhal, Coffee with Kaadhal Movie Trailer, Sundar C will find this news story useful.