தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி.
Also Read | "சர்தார் 2 வா??".. அடுத்தடுத்து 'Sequel'.. வெற்றி விழா மேடையில் கார்த்தி பகிர்ந்த சுவாரஸ்யம்!!
பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோயம்புத்தூரை சார்ந்த இவர் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த முறை மாமன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவருடைய இயக்கத்தில் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், உன்னைத் தேடி, அன்பே சிவம், கிரி, வின்னர், லண்டன், கலகலப்பு சீரிஸ், அரண்மனை சீரிஸ், தீயா வேலை செய்யனும் குமாரு, ஆம்பள ஆகிய படங்கள் முக்கியமானவை.
2006ல் வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக சுந்தர் சி அறிமுகமானார். சுந்தர் சி உதவி இயக்குனரான இயக்குனர் சுராஜ் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பின் வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள், ஐந்தாம் படை, முரட்டு காளை, தீ, இருட்டு போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சுந்தர் சி நடிப்பில் தலைநகரம் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் காஃபி வித் காதல் படம் நவம்பர் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி, தலைநகரம் படத்திற்கு முன்பே சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 1990 ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த வாழ்க்கை சக்கரம் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் மணி வண்ணன் இயக்கினார். 1995 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கிய முறை மாமன் படத்திலும் சிறிய வேடத்தில் தோன்றினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சுந்தர் சி இயக்கிய அருணாசலம் படத்தில் ரஜினியை பேட்டி எடுக்கும் பத்திரிகையாளராக சுந்தர் சி நடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
Also Read | போடு.! வரலாற்று புகழ்பெற்ற நகரில் 'பிரேமம்' அனுபமா.. கூட யாரு பாருங்க!