கொரோனா ஊரடங்கால் மோசமான வாழ்வாதாரத்தை பலரும் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் பிரபல சன் டிவியின் தாலாட்டு சீரியல் நடிகையான பரதா, சாலையோர வாசிகளுக்கு உணவளித்து உதவி செய்து வரும் புகைப்படத்தை தமது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து பலரையும் இவ்வாறான உதவிகளை செய்ய ஊக்குவித்து பதிவிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை, மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் ஊரடங்கு அமலில் உள்ளது. முன்னதாக ஹோட்டல்கள், சாலையோர உணவகங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போதும் இந்த நிலை தொடர்ந்தாலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீடித்து வருகிறது.
கொரோனாவை வெல்லும் முக்கியமான ஆயுதமான ஊரடங்குக்கு நல்ல பலன் கிடைத்து, கொரோனா குறைந்து வருவது ஒருபுறம் நிம்மதியை அளித்தாலும், இன்னொரு புறம் சாலையோர மற்றும் ஆதரவற்ற மக்கள் பலரும் வாழ்வாதாரம், பொருளாதார கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் பலரும் தவிக்கின்ற செய்தியை நாளும் நாளும் கேட்கிறோம்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் என பலரும் தங்களால் ஆனவரையில் உணவு சமைத்து மக்களுக்கு சேவை நோக்கில் இலவசமாக வழங்கி உதவுகின்றனர். இந்நிலையில் தான் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு சீரியலின் நடிகை பரதா சாலையோரம் உணவில்லாமல் தவிக்கும் ஆதரவற்ற மற்றும் வயதான மக்களுக்கு உணவளித்து வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் அந்த பதிவில், “தர்மம் தலைக்காக்கும், தர்மம் செய், பிறர் விரும்பச் செய், விரும்பி செய்” எனக் குறிப்பிட்டுள்ளார். தாலாட்டு சீரியலில் கோகிலா கேரக்டரில் நடிக்கும் பரதா நாயுடு, பரத் என்பவரை சென்ற 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். முன்னதாக ஜீ தமிழின் செம்பருத்தி சீரியலில் மித்ராவாகவும், தேவதையைக் கண்டேன் மற்றும் யாரடி நீ மோகனி சீரியல்களில் முக்கிய கேரக்டர்களிலும் நடித்து புகழ் பெற்றார்.
ALSO READ: இசையமைப்பாளர் அம்ரீஷ் மீதான 'இரிடியம்' குற்றச்சாட்டு ... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!