சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் ரோஜா. ரோஜா சீரியலை பொருத்தவரை சன் டிவியின் ஸ்டார் சீரியல் என்று சொல்லும் அளவுக்கு ரோஜா சீரியலுக்கு, சன் டிவி பார்வையாளர்கள் மட்டுமல்லாமல் மற்ற சேனல்கள் பார்க்கும் பார்வையாளர்களும் மிகவும் ரசிகர்களாக இருக்கின்றனர்.
இந்த சீரியலில் அவ்வப்போது காண்பிக்கப்படும் அட்வான்ஸாக காட்சிகள், இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்களை தாண்டி, வெகுஜன மத்தியிலும் மிகவும் பிரபலமாக கூடிய வகையில் இருப்பதை அடிக்கடி பார்த்திருப்போம். இந்த சீரியலுக்கு முகமும் முதுகெலும்பாக இருப்பதே இந்த சீரியலின் முதன்மை ஜோடிகள் தான் என்று சொல்லலாம்.
அர்ஜூன், ரோஜா எனும் முக்கிய முதன்மை கதாபாத்திரங்கள் தான் இந்த சீரியலின் மையக்கருவை தாங்குகின்ற கதாபாத்திரங்கள். அனு எனும் பெண் சூழ்ச்சி செய்து, அன்னபூர்ணி பாட்டியின் (வடிவுக்கரசி) பேத்தியாக வந்து நடிக்க, உண்மையான ரோஜா யார் என்பதை குடும்பத்தினருக்கும் கோர்ட்டுக்கும் நிரூபிக்க முயலும் கிரிமினல் வக்கீல் தான் ஹீரோ அர்ஜூன். சாக்ஷி எனும் பெண் தான் இந்த சீரியலின் முக்கிய வில்லி.
இந்த சீரியலில் நாயகன் அர்ஜூனாக சிபு சூர்யனும், அவரை அர்ஜூன் சார்.. அர்ஜூன் சார் என அழைக்கும் அப்பாவி நாயகி ரோஜாவாக பிரியங்கா நல்காரி இருவரும் நடித்து வந்தனர். இந்த நிலையில்தான் இந்த சீரியலில் இருந்து இந்த சீரியலின் முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நாயகன் சிபு சூர்யன் திடீரென விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அவருடைய ரசிகர்களுக்கு அவருடைய இந்த முடிவு மிகவும் அதிர்ச்சிகரமாகி இருக்கிறது.
இதை அவரே தம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். இது தொடர்பான அவருடைய பதிவில், “நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன்.. வரும் ஆகஸ்ட் வரை மட்டும்தான் இந்த சீரியலில் நடிப்பேன்.. மிகவும் யோசித்து புரொடக்சன் டீமின் அனுமதியுடன் தான், இந்த பயணத்தை நான் தொடங்குகிறேன்.. குட் பய் என்று சொல்வது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல.. எனினும் சில நேரங்களில் இது அவசியமாக இருக்கிறது.
எனக்கு மிகவும் ஸ்பெஷலான கதாபாத்திரம் அர்ஜுன் கதாபாத்திரம். என்னுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமானது அந்த கதாபாத்திரம். உங்களுடைய தொடர்ச்சியான ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றிகள்.. என்னுடைய புதிய ப்ராஜெக்ட்களில் உங்களை மகிழ்விக்க செய்வேன்.. உங்களுடைய அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் எப்போதும் எனக்கு தேவை!” என்று சிபு சூர்யன் தம்முடைய அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.