இவரே விலகுறாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்! அடுத்தடுத்து நீங்கும் பிரபல சீரியல் கேரக்டர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிவி சீரியல்கள் சின்னத்திரையில் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு வடிவங்களில் முக்கியமான ஒன்றாகும்.

கேம் ஷோக்கள், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் டிவி சேனல்களில் பல வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் காலப்போக்கில் வெளிவந்தாலும், சீரியல்கள் இன்னும் இவை அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தியே வருகின்றன. இதற்குக் காரணம் சீரியல் பார்க்கும் ஆர்வமுள்ள ரசிகர்கள் தான். அவர்களின் விருப்பத்துக்குரிய தொடர்கள் அவர்களை கவர்வதால் இன்னும் சீரியல்களுக்கான சின்னத்திரை மதிப்பு குறையவில்லை.

அப்படி ரசிகர்களின் விருப்பமான சீரியல்களில் ஒன்று தான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியல். புகழ்பெற்ற இந்த சீரியலில் இருந்து தான் தற்போது விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார் இந்த சீரியலின் நாயகன். நாயகனே விலகுவது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆம், அருண் எனும் கதிர் சீரியல் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகர்.  சன் டிவியில் பூவே உனக்காக சீரியலின் நாயகனாக தோன்றிய அருண் இப்போது இந்த சீரியலில் இருந்து விலகுவதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளதை அடுத்து இவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுபற்றிய தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், “நான் பூவே உனக்காக சீரியலை விட்டு வெளியேறுகிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். இனிமேல் நீங்கள் என்னை கதிராக பார்க்க முடியாது. இந்த சிறந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய எனது தயாரிப்பாளருக்கும் சன் டிவிக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் ஆதரவு இல்லாமல் நான் இன்று நான் இல்லை. நீங்கள் அனைவரும் எனக்கு அளித்து வரும் நிலையான அன்புக்கும் ஆதரவிற்கும் எனது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். கவலைப்பட வேண்டாம் நண்பர்களே, விரைவில் உங்கள் அனைவரையும் நல்ல செய்தியுடன் சந்திப்பேன். அனைவருக்கும்

மீண்டும் ஒரு முறை நன்றி, எனக்கு எப்போதும் உங்கள் அன்பும் ஆதரவும் தேவை!” என குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக இதே சீரியலில் இருந்து இந்த சீரியலின் கீர்த்தி எனும் பெயரில் இன்னொரு நாயகியாக நடித்த ஜோவிதா மேற்படிப்புக்காக இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். ஜோவிதா, நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் நாயகி பூவரசியின் கேரக்டருக்கு அம்மாவாக நடித்து வந்த நடிகை இந்த சீரியலில் முக்கியமானவர். சீரியலுக்கே அவருடைய கதாபாத்திரம் பலம் எனலாம். இந்த நிலையில் தான் அவர் திடீரென மரணம் அடைவதாக காட்சிகள் அமைக்கப்பட்டு அந்த கதாபாத்திரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. 

ALSO READ: தமிழ் சீரியலில் சோனா!.. இயக்கும் பிரபல திரைப்பட இயக்குநர் யார்னு பாருங்க!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sun tv Poove Unakkaga lead actor quits serial fans shock

People looking for online information on Arun, Fans, Kathir, Pooveunakkaga, Pooveunakkaga kathir, Serial Actor, Sun TV will find this news story useful.