”GET READY… வீரராகவன் MISSION”… பீஸ்ட் லேட்டஸ்ட் STYLISH போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது.

Advertising
>
Advertising

பீஸ்ட்…

விஜய்யின் 65 ஆவது படமான பீஸ்ட் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இந்த படம் அமைந்துள்ளது. பீஸ்ட் திரைப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார். 

படத்தில் விஜய் வீரராகவன் என்ற உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவரோடு பூஜா ஹெக்டே, யோகிபாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.  இவர்களோடு முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார். அவர் நடிப்பில் முதலில் வெளியாகும் படமாக பீஸ்ட் அமைந்துள்ளது. பேன் இந்தியா திரைப்படமாக 5 மொழிகளில் வெளியாகிறது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் ரிலீஸ்…

பீஸ்ட் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. தமிழக உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தெலுங்கில் விஜய் 66 படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பீஸ்ட் படத்தை வெளியிடுகிறார். மலையாளத்தில் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனத்தினர் வெளியிடுகின்றனர். பாலிவுட்டிலும் கணிசமான திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகிறது. படத்தின் ப்ரமோஷனுக்காக 10 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் சன் தொலைக்காட்சியில் அளித்த நேர்காணல் நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

வீரராகவன் mission…

நாளை படம் ரிலீஸாக உள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.  போஸ்டரில் விஜய் துப்பாக்கியோடு ஸ்டைலாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரோடு ”வீரராகவனின் மிஷனுக்கு தயாராகுங்கள். நாளையில் இருந்து” எனக் குறிப்பிட்டுள்ளனர். பீஸ்ட் படம் தொடங்கியதில் இருந்தே வெளியாகும் போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்துவருகின்றன. அதுபோலவே பீஸ்ட் படத்தில் விஜய்யின் தோற்றமும் சிலாகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Sun Pictures released Beast movie latest stylish poster

People looking for online information on Nelson, Poster, Sun pictures, Vijay will find this news story useful.