”எல்லா செண்டர்லயும் பீஸ்ட் கொண்டாட்டம்”… சன் பிக்சர்ஸ் பகிர்ந்த மாஸ் POSTER!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படம் வெளியாகி ஒரு நாள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள புதிய போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertising
>
Advertising

Guinness Record படைத்த பாடகர்‌ வேல்முருகன் மகள்.. முதல்வரிடம் வாழ்த்து பெற்று நெகிழ்ச்சி

விஜய்யின் 65 ஆவது படமான பீஸ்ட் திரைப்படம் நேற்று ஏப்ரல் 13 அம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது. இந்த ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக பீஸ்ட் இருந்ததால் நேற்று காலை திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரமாகக் கொண்டாடி படத்தைப் பார்த்தனர். தமிழகத்தில் சுமார் 800 திரையரங்குகள் வரை இந்த திரைப்படம் வெளியானது.

பேன் இந்தியா ரிலீஸ்…

படத்தில் விஜய் வீரராகவன் என்ற உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவரோடு பூஜா ஹெக்டே ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே, அபர்ணா தாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.  இவர்களோடு முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார். அவர் நடிப்பில் முதலில் வெளியாகும் படமாக பீஸ்ட் அமைந்துள்ளது. பேன் இந்தியா திரைப்படமாக 5 மொழிகளில் நேற்று வெளியானது. நெல்சனின் முந்தைய படங்களைப் போல நகைச்சுவை படமாக இல்லாமல் பீஸ்ட் திரைப்படம் ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப் பட்டிருந்தது.

Hype உருவாக்கிய ப்ரமோஷன்கள்…

இந்த படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாக படக்குழு செய்த ப்ரமோஷன்கள் முக்கியக் காரணமாக அமைந்தன. ஆரம்பத்தில் இருந்தே விஜய்யின் ஸ்டைலான போஸ்டர்களை வெளியிட்டு வந்தனர். அதுபோல அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் வெளியாகி ஹிட்டடித்தன. அதே போல ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இப்படி அடுத்தடுத்து சீரான இடைவெளியியில் ப்ரமோஷன்களை வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வந்தனர்.

பீஸ்ட் இரண்டாம் நாள்…

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஆனாலும் நேற்று மிகப்பெரிய அளவில் வசூலை பீஸ்ட் படம் செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் பீஸ்ட் படத்தை பிளாக்பஸ்டர் என்று அறிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.

"பேய் மாதிரி எடுத்துருக்காங்க"…"ஜூம் பண்ணிக் காட்டுங்க இன்னும் புல்லரிக்குது"… KGF 2 public review

தொடர்புடைய இணைப்புகள்

Sun pictures announced beast as a blockbuster movie

People looking for online information on Anirudh, Beast, Beast blockbuster movie, Nelson Dilipkumar, Pooja Hegde, Sun pictures, Vijay, Yogi Babu will find this news story useful.