பன்முக திறமை மிகுந்த நடிகர் தனுஷுக்கு கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கிய 'கர்ணன்' திரைப்படம் திரையரங்கில் வெளியானது. கர்ணன் வெற்றிக்குப் பிறகு, நடிகர் தனுஷ் கடைசியாக OTT இயங்குதளமான Netflix இல் வெளியான 'ஜெகமே தந்திரம்' என்ற படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் 'மாறன்' படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சத்ய ஜோதி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது.
இதன் பிறகு, தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்கிறார்.
இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
இப்பொழுது இந்த படத்தின் புதிய அப்டேட்டாக இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜீம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.