‘இவரு TASK-ம் ஆடல.. GAME-ம் ஆடல’.. சுஜா ரெண்டுமே நல்லா பண்ணா.. ஆனா ELIMINATE ஆகிட்டா.. யார சொல்றாங்க அனிதா! BBULTIMATE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 23, பிப்ரவரி 2022: டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் 24 நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, அதாவது முதல் பிக்பாஸ் ஓடிடி சீசன் பரபரப்பாகவும் சூடுபடிக்கவும் தொடங்கி வேற லெவலில் சென்று கொண்டிருக்கிறது.

suja well played than balaji says anitha bigg boss tamil
Advertising
>
Advertising

நடிகர் கமல்ஹாசன் விலகல்

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஐந்து சீசன்களை நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியில் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த முதல் ஓடிடி சீசனையும் அவரே தொகுத்து வழங்கினார். இதனிடையே நடிகர் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்துக்காக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக வருத்தத்துடன் அறிவித்திருந்தார்.

suja well played than balaji says anitha bigg boss tamil

தேவதை, சாத்தான் டாஸ்க்

இதனைத் தொடர்ந்து வழக்கம்போல டாஸ்குகள் ஹவுஸ்மேட்ஸ்குக்கு கொடுக்கப்பட்டு வந்தன. அதன்படி பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு தேவதை மற்றும் சாத்தான் என இரண்டு அணிகளாகப் பிரிந்து ஆடக்கூடிய டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் தான் நிரூப் மற்றும் வனிதா, நிரூப் மற்றும் பாலா ஆகியோருக்கு இடையே பெருத்த சண்டைகள் வெடித்து வருகின்றன.

வனிதா - தாமரை

முன்னதாக கிச்சனில் தாமரை சமையல் குறித்து வனிதா ஏதோ விமர்சனம் செய்ய, வனிதாவுக்கும் தாமரைக்கும் முட்டிக் கொண்டது. இதில் கோபம் வந்த வனிதா,  சாப்பிட்டுக்கொண்டு இருந்த உணவை எடுத்துச் சென்று குப்பை தொட்டியில் கொட்டி விட்டு போய்விட்டார். இந்த விஷயம் பிக் பாஸ் வீட்டுக்குள் பரபரப்பானது.

யாரை பத்தி பேசுறாங்க..

இந்த நிலையில்தான் பிக் பாஸ் வீட்டுக்குள் அனிதா சம்பத் மற்றும் பாலாஜி முருகதாஸ் இருவரும் உட்கார்ந்து கிசுகிசுவென யாரோ ஒருவர் பற்றி பேசிக் கொண்டிருக்க கூடிய புதிய ப்ரோமோ வெளியானது. இந்த புரோமோ இவர்கள் இருவரும் யாரைப் பற்றிப் பேசுகிறார்கள்? என்கிற கேப்ஷனுடன் டிஸ்னி+ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியானது. ஆனால் இந்த புரோமோவில் இவர்கள் யாரைப் பற்றி பேசுகிறார்கள் என்கிற ஹின்ட் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அவர் சத்தமில்லாமல் ஏதோ செய்கிறார்

அதன்படி இந்த புரோமோவில் பாலாஜி முருகதாஸிடம் அனிதா, பேசும்பொழுது, “எப்போதுமே அவர் பாலாஜி அண்ணாவுடன் தான் இருப்பார். அவர் என்ன பேசுகிறார் என்பது நமக்கு தெரியாது, ஆனால் அவர் எந்த விளையாட்டும் விளையாடாதது போல் நமக்குத் தெரியும். ஆனால் அவர்எதுவுமே செய்யாமல் இவ்வளவு ஆதரவு கிடைக்காது. அவர் சத்தமில்லாமல் ஏதோ செய்கிறார். நம் கண்ணில் படாததால் அவரை நாம் தவறாக புரிந்து கொண்டு அவர் கேம் ஆடாததாக நினைத்துக்கொண்டு நாமினேஷன் செய்கிறோம்.

சுஜா நல்லா தான் விளையாண்டா

ஆனால் அவரும் பாலாஜி அண்ணாவும் தனியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது மக்களிடம் கனெக்ட் ஆகலாம். ஒருவேளை பாலாஜி அண்ணா இல்லை என்றால் அவர் தனியாகவே அமர்ந்திருக்கிறார். ஒருமுறை பாலாஜி அண்ணா கூட காப்பாற்றப்பட்டார், அதற்கு காரணம் சினேகன் அண்ணாவின் ரசிகர்களாக கூட இருக்கலாம்.

ஏன் என்றால் பாலாஜி அண்ணாவை கம்பேர் பண்ணும்போது சுஜா நன்றாகவே டாஸ்க் விளையாடினார். ஆனால் பாலாஜி அண்ணா கேமும் நன்றாக விளையாடவில்லை, டாஸ்க்கும் நன்றாக விளையாடவில்லை!” என்று கூறினார்.2

Also Read: அடக்கடவுளே! பிக்பாஸில் நிரூப் சொன்ன அதிர்ச்சி தகவல்.. இவருக்கு பின்னால இப்படி ஒரு சோகமா?

தொடர்புடைய இணைப்புகள்

Suja well played than balaji says anitha bigg boss tamil

People looking for online information on Anitha, Anitha Sampath, Balaji, Balaji Murugadoss, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, Suja, Suja Varunee will find this news story useful.