டிவி நிகழ்ச்சியில் DANCE ஆடும்போது சோகத்தின் உச்சம் - சுஜா & சிவா சொன்ன ஷாக்கிங் தகவல் EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவன "பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2" நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இந்த போட்டியில், அமீர் - பாவனி ஜோடி மற்றும் சுஜா வருணி - சிவா ஜோடி, டைட்டிலை வென்று அசத்தி இருந்தனர். அதிலும் குறிப்பாக, இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே சிவா மற்றும் சுஜா ஆகியோர் மிகவும் அசத்தலான நடனத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து மக்களின் ஆதரவையும் பெற்று வந்தனர்.

Suja Varunee Shivaji Dev breaks sad thing during BB Jodigal
Advertising
>
Advertising

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட சுஜா வருணி, இந்த சீசனின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வென்றதை அடுத்து, இந்த நிகழ்ச்சிக்கு பின்னால் நடந்த ஒரு துயர சம்பவம் தொடர்பாக, Behindwoods TV நிகழ்ச்சிக்கு பிரத்தியேகமான பேட்டி ஒன்றை கணவன் மனைவியான சிவா மற்றும் சுஜா ஆகியோர் அளித்துள்ளனர். அப்போது பேசிய சிவா,  “BB Jodigal 2 நிகழ்ச்சியில், ஹாரர் டான்ஸ் டாஸ்கின் போது மேடையில் ஆடிய சுஜா திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். மேலும் அதனுடன் அவர் சிறுநீரும் கழித்து விட்டார்.

Suja Varunee Shivaji Dev breaks sad thing during BB Jodigal

தொடர்ந்து, சுஜாவை மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்த போது, அவர் கர்ப்பமாக இருப்பதும் உறுதியானது. எட்டு வாரங்கள் கர்ப்பமாக இருந்தது கண்டறியப்பட்டது. டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்தும் நாங்கள் டாக்டரிடம் அறிவுரை பெற்றுக் கொண்டோம். அப்போதும் நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்கலாம் என்று மருத்துவர் அறிவுறுத்தினார். அப்படி இருக்கையில்தான், முக்கியமான டாஸ்க் ஒன்றில், சுஜாவின் உடம்பில் இருந்து ரத்தம் வெளியேறியது.

அந்த சமயத்தில் மருத்துவரிடம் கன்சல்ட் செய்தோம். அப்போதுதான் வயிற்றில் இருந்த அவரது கரு கலைந்து விட்டதாக மருத்துவர்கள் எங்களிடம் கூறினார். இதனால் நிகழ்ச்சியில் உடனடியாக கலந்து கொள்ள முடியாத நிலை உருவானபோதும் இரண்டு நாட்கள் கழித்து இந்த நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொண்டார் சுஜா" என சிவா கூறியுள்ளார்.

சிவாஜி தேவ் என்கிற சிவா சொன்ன இந்த தகவல், ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது. அதே வேளையில் இப்படிப்பட்ட துக்கத்தை மறைத்து அதனை தாண்டி வந்து ஜெயித்த சுஜா மற்றும் சிவா ஆகியோருக்கு ஆறுதலான மற்றும் நம்பிக்கையான கருத்துகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

டிவி நிகழ்ச்சியில் DANCE ஆடும்போது சோகத்தின் உச்சம் - சுஜா & சிவா சொன்ன ஷாக்கிங் தகவல் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Suja Varunee Shivaji Dev breaks sad thing during BB Jodigal

People looking for online information on Bb jodigal 2, Shivaji dev, Suja Varunee will find this news story useful.