செம்ம.. 9 வகை உணவுகளுடன் மாதவனுக்கு விருந்து வைத்த சுதா கொங்கரா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுதா கொங்கரா.

Advertising
>
Advertising

இவர் இயக்கிய துரோகி, இறுதிச்சுற்று திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவரின் மூன்றாவது படமாக சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் தேசிய விருதுகளையும் வென்றது.

சூரரைப் போற்று படத்தின் வெற்றியை அடுத்து அந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். இன்னும் இந்த படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். கதாநாயகியாக ராதிகாமடன் நடிக்கிறார். சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைத் தயாரிப்பாளராக இந்த படத்தைத் தயாரிக்கிறது.

சூரரைப்போற்று இந்தி ரீமேக் படத்திற்கு பிறகு KGF 2 மூலம் கவனம் பெற்ற ஹோம்பாலே   நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்க  இயக்குனர் சுதா கொங்கரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் ஹீரோ யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சமீபத்தில்  காயமடைந்த காரணத்தால் ஓய்வில் இருக்கும் சுதா கொங்கரா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் நடிகர் மாதவனுக்கு தமது வீட்டில் 9 வகை உணவுகளுடன் சைவ விருந்து வைத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இருபது வருட நட்பு. சாதம், வடியல், பொடி, சாம்பார், வத்தல் குழம்பு, தயிர் சாதம், மரவள்ளி கிழங்கு பச்சடி மற்றும் டெசர்ட் வகைகளுடன் மாதவன் கொண்டு வந்த ரத்னகிரி அல்போன்சா மாம்பழங்கள்! நன்றி Maddy!" என சுதா கொங்கரா ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Sudha Kongara Vegitarian Treat for Actor R Madhavan

People looking for online information on R Madhavan, Sudha Kongara will find this news story useful.