தமிழ் சினிமாவில் வசூல் மாஸ்டராக ஏகப்பட்ட பிளாக் பஸ்டர் படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார் நடிகர் விஜய். தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், கலாநிதி மாறன் தயாரிப்பில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ், போன்ற பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், படத்தின் அடுத்த கட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது. இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத்.
![sudden surprise meet of Vijay and Yuvan Shankar Raja hits internet sudden surprise meet of Vijay and Yuvan Shankar Raja hits internet](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/sudden-surprise-meet-of-vijay-and-yuvan-shankar-raja-hits-internet-new-home-mob-index.jpg)
இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் விஜய் அடுத்ததாக, தளபதி 66, படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், விஜய் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவுகின்றது.
இந்த புகைப்படத்தை பார்த்தவுடன் பல கேள்விகளும், குழப்பங்களும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருவரும் இணைந்த காரணம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்க உள்ளாரா? என்று பேசத்தொடங்கி இருக்கின்றனர் நெட்டிசன்ஸ்.
யுவன் ஷங்கர் ராஜா தற்போது அஜித் படமான வலிமை படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அடுத்த ஹிட்டுக்கு தயாராகிறார் யுவன் என்று, பேச தொடங்கிவிட்டனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பல படங்கள் வெளிவர உள்ளது. விருமன், ஏஜென்ட் கண்ணாயிரம், வீரமே வாகை சூடும் போன்ற படங்கள் லிஸ்டில் நிற்கின்றன.