பிக்பாஸ் நிகழ்ச்சியின் மிக முக்கியமான போட்டியாளராக மாறியிருக்கிறார் பாலாஜி. ஆரம்பத்தில் அமைதியாக இருந்து, பின்பு இருந்து 'Simply waste' என்ற பட்டத்தை பெற்றவுடன் அவருக்கு போட்டியின் மீதான ஆர்வம் அதிகமாகியது. அதன் பிறகு பல அதிரடிகளை செய்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

இந்நிலையில் இன்று பாலாஜி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவரும் சுசித்ராவும் நெருங்கிய நண்பர்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த சுசித்ரா பாலாவுடன் நெருங்கிய நண்பராக பழகி வந்தார். ஆனால் இரண்டு வாரத்திலேயே அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்.
அதன் பின்பு சுசித்ரா பாலாஜி பற்றிய சில நெகிழ்ச்சியான பதிவுகளையும் வெளியிட்டார். இந்நிலையில் அவர் தற்போது பாலாஜிக்கு போஸ்டர் உடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் கூறும் பொழுது "பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல. உங்கள் அனைத்து இனிமையான கனவுகளும் நிறைவேற வேண்டும்" என்று கூறியுள்ளார். மேலும் இன்று பிக்பாஸ் பாலாவுக்கு நண்பர்களின் ஸ்பெஷல் வாழ்த்துக்களை வீடியோவாக காட்டுவார் என்பதில் சந்தேகமில்லை.