பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுசித்ராவும், பாலாவும் நெருங்கிய நண்பர்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த சுசித்ரா பாலாவுடன் நெருங்கிய நண்பராக பழகி வந்தார். ஆனால் இரண்டு வாரத்திலேயே அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் பாலாவுக்கு சப்போர்ட் செய்து பல பதிவுகளை பகிர்ந்து வந்தார். இந்நிலையில் அவர் முதன்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பேட்டியளித்துள்ளார். அதில் நமக்கு தெரியாத பல விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறும் பொழுது "ஷிவானி மேல் நான் கோபப்படக் காரணம், அவர் என்னை ஒதுக்குவதை நான் நேரடியாக பல முறை பார்த்தேன். முதல் மூன்று நாட்களில் அவர் என்னுடன் பேசியதும், பின்பு என்னிடம் பேசுவதும் வேறு விதமாக இருந்தது. அனிதாவுக்கும் ஷிவானிக்கும் முட்டிக் கொள்வதற்கும் கூட இதுதான் காரணம். அனிதாவும் பாலாஜியும் ஒன்றாக பேசுவது கூட அவருக்கு பிடிக்காது" என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த சீசனில் முதல் மூன்று இடத்தை யார் படிப்பார்கள் என்று கேள்விக்கு, அவர் "ஆரி, ரம்யா மற்றும் அனிதா தான் முதல் மூன்று இடத்தில் வருவார்கள்" என்று கூறியுள்ளார்