பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் சுசித்ரா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். வெளியேறிய பிறகு வீட்டுக்குள் இருப்பவர்களை பற்றி கமலிடம் அவர் பகிர்ந்த விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது. மிகவும் சரியாக தான் கூறுகிறார் என்பது போல் பலரும் கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு அதை பற்றி ஒரு சில பதிவுகளை அவர் தனது இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டார்.

இந்நிலையில் தற்போது முதல் முறையாக பாலாவை பற்றி எமோஷனலாக ஒரு பதிவிட்டுள்ளார். பாலா கண்ணீர் விட்டு அழுத புகைப்படங்களை வெளியிட்டு "இந்த முகத்திற்கு எதையும் பொய்யாக செய்யத் தெரியாது" என்று கூறியுள்ளார். இதன் மூலம் இன்னும் அவர் பாலாவை தான் பிக்பாஸ் வீட்டில் ஆதரிக்கிறார் என்பது போல் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் பாலா, ஆரி இடையே எழுந்த வாக்குவாதம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இது பற்றி இந்த வாரம் கமல் குறும்படம் காட்டுவார் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.