சுபாஸ்கரனின் லைகா நிறுவனத்தின் அடுத்தத்தடுத்த படங்கள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.
சுபாஸ்கரனால் லண்டனில் தோற்றுவிக்கப்பட்டு இயங்கி வந்த நிறுவனம் லைகா மொபைல்ஸ். உலகெங்கும் பிரபலமான இந்நிறுவனத்தின் சேர்மன் சுபாஸ்கரன் ஒரு தீவிர சினிமா ரசிகர் ஆவார்.
தனது எத்தனையோ அலுவல்களுக்கு இடையே, நாளுக்கொரு திரைப்படம் பார்க்கும் அளவுக்கு இவர் சினிமா மீது பெருங்காதல் கொண்டவராக இருந்துள்ளார். இதுவே இவரை சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட செய்தது எனலாம்.
லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவத்தை தொடங்கி தமிழில் 2014-ஆம் ஆண்டு கத்தி திரைப்படத்தை இவர் தயாரித்தார். படத்தின் ரிலீஸுக்கு முன்பே கடுமையான எதிர்ப்புகள் கிளம்ப, அதையும் கடந்து வெளியான இத்திரைப்படம் வசூலில் ஹிட் அடித்ததுடன் பெருவாரியான பாராட்டுக்களையும் குவித்தது.
இதை தொடர்ந்து எனக்கு இன்னொரு பேர் இருக்கு, இப்படை வெல்லும், எமன், தியா என சிறுபட்ஜட் படங்கள் ஒருப்பக்கம், கோலமாவு கோகிலா, செக்கச் சிவந்த வானம், வட சென்னை, காப்பான் என டாப் நடிகர்களின் படங்கள் இன்னொரு பக்கம் என பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளது லைகா ப்ரொடக்ஷன்ஸ்.
மேலும் இந்தியாவில் அதிக பட்ஜட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களில் முதல் இடத்தில் இருக்கக்கூடிய ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவான 2.0 திரைப்படத்தை தயாரித்து தமிழ் சினிமாவின் வீச்சை இன்னும் வீரியமாக பதிவு செய்தது லைகா நிறுவனம்.
இதுமட்டுமின்றி நானும் ரவுடிதான், விசாரணை, காலா, பரியேறும் பெருமாள் போன்ற தரமான திரைப்படங்களை விநியோகித்து, சினிமாவிற்கான ஆரோக்கியத்தை பேனவும் லைகா தவறவில்லை.
அடுத்ததாக யோகி பாபு நடித்துள்ள பன்னி குட்டி, திரிஷாவின் ராங்கி என சிறிய படங்களோடு, கமலின் இந்தியன்-2, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் ஆகிய மெகா ப்ராஜக்ட்களையும் கைவசம் வைத்துள்ளது லைகா ப்ரொடக்ஷன்ஸ்.
இத்துடன் வரும் 2021-ஆம் ஆண்டில், இன்னும் பல்வேறு சிறிய மற்றும் பெரிய தமிழ் திரைப்படங்களை தயாரிக்கும் திட்டத்தில் உள்ள லைகா, ஹிந்தி சினிமாவிலும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை தரமான தமிழ் படங்களை கொடுத்து வந்த லைகா நிறுவனமும் அதன் சேர்மன் சுபாஸ்கரணும், நிச்சயம் இந்திய சினிமாவில் பெரிய மாயங்களை நிகழ்த்தி காட்டுவார்கள் என்பதே சினிமா ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.!