தளபதி விஜய்யின் மாஸ்டர் AUDIO LAUNCH: பிரபலம் அதிரடி - ''மாஸ்டரோட அடி எப்படி இருக்கும் தெரியுமா ?''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' பட இசை வெளியீட்டு விழா தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் பிரபலங்கள் ஒவ்வொருவரும் 'மாஸ்டர்' படம் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சண்டைபயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது, ''எல்லோரும் இசை வெளியீட்டு விழா குறித்து கேட்டுட்டே இருந்தாங்க. திருவிழா மாதிரி பார்க்குறாங்க'' என்றார். அப்போது தொகுப்பாளர்கள், ''மாஸ்டர் அடி எப்படி இருக்கும்?'' என்று கேட்க,  ''அவர் ரொம்ப பாசக்காரர். பாசமா அடிப்பாரு'' என்று பதிலளித்தார்.

பின்னர் பேசிய ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், ''சார் கூட வொர் பண்ணது ஒரு இல்யூசன் மாதிரி இருக்கு'' என்றார். தொடர்ந்து பேசிய எடிட்டர் ரூபன், ''விஜய் சார் பத்தி சொல்லணும்னா யாரும் பார்க்காத, லோகேஷ் கனகராஜ் மனசுல இருந்த விஜய் சார காமிச்சிருக்காங்க. விஜய் சேதுபதிய பார்த்தா கண்டிப்பா பயம் வரும்'' என்றார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து குட்டி ஸ்டோரி, வாத்தி கமிங், வாத்தி ரெய்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது. இந்த படம் ஏப்ரல் மாத வெளியீடாக திரைக்குவரவிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

தளபதி விஜய்யின் மாஸ்டர் குறித்து ஸ்டண்ட் சில்வா பேச்சு | Stunt Silva speaks about Thalapathy Vijay on Vijay Sethupathi, Lokesh Kanagaraj's Master audio la

People looking for online information on Lokesh Kanagaraj, Silva, Vijay, Vijay Sethupathi will find this news story useful.