விஜய் டிவி பிக்பாஸ் வீட்டில் 50 நாட்கள் கடந்து போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்குகளை செய்து வருகின்றனர். இதில் அண்மைக்காலமாக பள்ளிகளை நினைவுபடுத்தும் கனா காணும் காலங்கள் டாஸ்க் நடைபெற்று வந்தது.
ஒரு போர்டிங் பள்ளி மாணவர்கள் எப்படி இருக்க வேண்டுமோ அவ்வாறு மிகவும் ஸ்ட்ரிக்டாக இந்த பள்ளி சூழல் அமைக்கப்பட்டது. இதில் வார்டனாக சிபி இருந்தார். ஆசிரியர்களாக ராஜூ, அபிஷேக் உள்ளிட்டோர் வலம் வந்தனர். இதேபோல் பிக் பாஸ் வீட்டுக்குள் அண்மையில் இணைந்த பிரபல விஜய் டிவி கோரியோகிராபரான அமீர் ஆசிரியராக இருந்தார்.
அவ்வப்போது அமீர் நடன பள்ளி ஆசிரியராக, அனைவருக்கும் நடனம் கற்றுக் கொடுத்து வந்தார். இதனிடையே சிபி ஒரு கண்டிப்பான வார்டனாக அனைவரையும் கண்டிப்புடன் நடத்தினார். ராஜூ உள்ளிட்ட ஆசிரியர்களும் கொஞ்சம் கண்டிப்புடன் இருந்தனர். எனினும் அபிஷேகம் மீது அந்த அளவுக்கு மாணவர்களை ஸ்ட்ரிக்ட்டாக நடத்தவில்லை என்று சொல்லலாம்.
முன்னதாக ராஜூ மற்றும் சிபி இருவரும் அக்ஷராவை திருக்குறளை மனப்பாடம் பண்ணி சொல்லச் சொன்ன போது சிபி நேர விஷயங்களில் கட்டுப்பாடு கடைபிடிக்கச் சொல்லி கண்டிப்புடன் நடந்துகொண்டதாக அக்ஷரா டென்ஷன் ஆனார். பின்னர் அவரை கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் பேசினார்.
இதனிடையே பிக்பாஸ், பள்ளிக்கால டாஸ்க் முடிவுக்கு வந்தது. இறுதியில், வார்டனின் குச்சியை எடுத்தது யார்.? சிபியை கிண்டலடித்து ஒரு அஓவியத்தை வரைந்தது யார்? என்றெல்லாம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த தப்பை எல்லாம் செய்தது தான்தான் என்று ஒதாமாக முன்வந்து ஒப்புக் கொண்ட ஐக்கியை அனைவரும் பாராட்டினர்.
இதனை தொடர்ந்து ஒரு சிறிய விழாவும் நடைபெற்றது. அந்த விழாவில் பிக்பாஸ் போர்டிங் ஸ்கூலின் சிறந்த மாணவராக நிரூப் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றியாளர்களுக்கு பேட்ஜ்கள் வழங்கப்பட்டன.
அவற்றை சிபி, அமீர் உள்ளிட்டோர் வழங்கினர். இத்துடன் போர்டிங் ஸ்கூல் லைஃப் டாஸ்க் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. முடிவில் அனைவருக்கும் சாக்லேட் வழங்கப்பட்டன.
இப்படி இந்த டாஸ்க் முடிந்ததுதான் தாமதம், உடனே வார்டனாக சிபி இருந்து படுத்திய பாட்டை நினைவில் வைத்துக் கொண்டும், ஆசிரியர்கள் மிகவும் ஓவராக பண்ணிய அலப்பறைகளை நினைவில் வைத்துக் கொண்டும், மாணவர்கள் நிலையில் இருந்த மற்ற போட்டியாளர்கள் அனைவரும் இவர்களுக்கு பவுடர் அடித்தும், அலங்கோலப்படுத்தி, கட்டி வைத்து அடித்து ஜாலியாக பழிவாங்கினர்.
இதனைத் தொடர்ந்து இந்த போர்டிங் ஸ்கூல் டாஸ்க் முடிவடைந்து அடுத்த டாஸ்க் தொடங்கியது.