பார்வையாளர் வயது, படத்தின் வகையை பொறுத்து ஓடிடிகளுக்கு 5 புதிய விதிகள்! - மத்திய அரசு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமூக வலைதளங்களுக்கும் அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஒட்டுமொத்த ஓடிடி தளங்களுக்கும் மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை தற்போது விதித்துள்ளது.

அதன்படி ஓடிடி மற்றும் டிஜிட்டல் பப்ளிஷிங் நிறுவனங்கள் தங்கள் தளங்களில் பதிவேற்றும் திரைப்படங்கள் மற்றும் கண்டண்ட்களை வன்முறை, வயதுவந்தோர் (Adult),மொழி, பாலினம் அடிப்படையில் 13+, 16+ (வயது வாரியாக) என 5 விதமான வயதினருக்கு ஏற்ப வகைப்படுத்த வேண்டும்.

இதற்கென U (Universal- அனைவருக்குமானது), U/A 7+ (வயதினருக்கானது), U/A(வயதினருக்கானது) 13+, U/A(வயதினருக்கானது) 16+, and A (Adult-வயது வந்தோருக்கானது) என்று 3 வகையான சுய தணிக்கைகளைச் செய்ய வேண்டும்.  குறிப்பாக U/A சான்றிதழுடன் கூடிய 13+ (வயதினருக்கான) திரைப்படங்களை பெற்றோர் மட்டுமே காணக்கூடிய Parental locks முறையில் அமைக்க வேண்டும்.

இவை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓடிடிகளின் இந்த சுய ஒழுங்குக் கட்டுப்பாடுகளை தலைமை தாங்கி மேற்பாரவையிடுவார்கள். டிஜிட்டல் மீடியாக்களின் பத்திரிகை நன்னடத்தை கவுன்சில் விதிமுறைகளும், கேபிள் டிவி கட்டுப்பாட்டுக்கு கீழான விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட வேண்டும். அத்துடன் இனி ஓடிடி இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சரகத்தின் கீழ் வரும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவகேடர் தெரிவித்துள்ளார்.

இவை தவிர, அரசு அல்லது நீதிமன்றம் உத்தரவிட்டால் சர்ச்சையான இணையதள பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும். புகார் அளித்த 24 மணி நேரத்துக்குள் சர்ச்சை படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும். இதேபோல் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பக் கூடாது என பல்வேறு ஒழுங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

ALSO READ: "இந்த சந்தோஷத்துக்கு காரணமே நீங்கதான்".. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை..  கேக் வெட்டி கொண்டாட்டம்!

தொடர்புடைய செய்திகள்

Strict norms for OTT and social media platforms India ஓடிடி

People looking for online information on ஓடிடி, Digital platform, Grievance, OTT, Social Media Platform will find this news story useful.