இயக்குனர் லிங்குசாமிக்காக களமிறங்கிய சிம்பு..! எதற்காக தெரியுமா? செம்ம தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராம் பொதினேனி நடிப்பில் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் “தி வாரியர்”.

Advertising
>
Advertising

கோலிவுட் மற்றும் டோலிவுட் இரண்டு திரைத்துறைகளிலும் பிரபலமான நடிகர் ஆதி பினிசெட்டி, “தி வாரியர்” படத்தில் வில்லனாக நடிக்கிறார், தென்னிந்திய திரையுலகின்  இளம் நடிகைகளில் ஒருவரான கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.

காதலர் தினத்தை முன்னிட்டு, படத்தின் நாயகி கீர்த்தி  ஷெட்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி 14 அன்று வெளியிடப்பட்டது. அதில் அவர் விசில் மகாலட்சுமியாக நவநாகரீக தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். சமீபத்தில், மகா சிவராத்திரி தினத்தில், ஆதியின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இந்த படத்தில் அக்‌ஷரா கவுடா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Srinivasaa Silver Screen நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி மிக பிரமாண்ட  பட்ஜெட்டில் தயாராகும் “தி வாரியர்” படம், கோபிசந்த், தமன்னா நடிப்பில், இந்த நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான ‘சீடிமார்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு,இந்த படம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ராம் பொதினேனியின் இஸ்மார்ட் ஷங்கரின் வெற்றிக்குப் பிறகு ‘தி வாரியர்’ வருவது குறிப்பிடதக்கது.

ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ள இந்த அதிரடி திரைப்படத்தை பவன் குமார் வழங்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஒளிப்பதிவை சுஜித் வாசுதேவ் செய்கிறார். இந்நிலையில் நடிகர் சிம்பு STR ஒரு சிறப்பு பாடலை (புல்லட்) இந்த படத்திற்காக பாடுகிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த 'புல்லட்' பாடல் ஒரு பவர்-பேக் ஆகும், இது கேட்கவும் பார்க்கவும் ஒரு முழுமையான விருந்தாக இருக்கும் என்று படக்குழு நம்பிக்கையுடன் கூறுகிறது.

ராம் பொதினேனி, லிங்குசாமி, தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரின் நல்ல நண்பரான சிம்பு, தமிழில் பல பாடல்களைப் பாடியவர், தி வாரியர் படத்தில் புல்லட் பாட்டிற்கு தனது சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார்.

ஜூலை 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிட தயாராகி வரும் இப்படத்தின் பல சிறப்பம்சங்களில் ஒன்றாக இந்த மாஸ் நம்பர் பாடல் இருக்கும்.

தொடர்புடைய இணைப்புகள்

STR Sung a Song for RAPO Lingusamy Devi Sri Prasad

People looking for online information on Lingu Samy, RAPO, Silambarasan TR, Simbhu, Str will find this news story useful.