போடு வெடிய.. கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் "பத்து தல" .. அடுத்த கட்ட மாஸ் அப்டேட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் நடிப்பில் 'பத்து தல' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டிருந்தார்.

2017-ம் ஆண்டு கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் வெளியான படம் 'முஃப்தி'. சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கையும் நரதன் இயக்கி வந்த நிலையில், அந்த பட பணிகள் நிறுத்தப்பட, யஷ் நடிக்கும் அடுத்த படத்தை நரதன் இயக்க ஒப்பந்தமானார்.

இந்நிலையில்தான், சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை திரைப்படங்களை இயக்கிய கிருஷ்ணா, 'பத்து தல' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை சிலம்பரசன், கவுதம் கார்த்திக் நடிப்பில் இயக்குகிறார்.

இப்படத்தில் இவர்களுடன் ப்ரியா பவானி சங்கர், கலையரசன், டிஜே, மனுஷ்ய புத்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில்  வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்திலான, மாநாடு திரைப்படத்தில் அண்மையில் தான் நடித்திருந்தார். இதனிடையே கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சூப்பரோ சூப்பர்!! சிம்புவைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும் மாஸ் நடிகர்? பரபரப்பு தகவல்!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

STR Pathu thala shooting update சிம்பு பத்து தல

People looking for online information on Gautham Menon, Silambarasan TR, VenthuThaninthathuKaadu will find this news story useful.