பிரபல விஜய் டிவி நிகழ்ச்சிகளின் கோரியோகிராஃபர் அமீர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளராக உள்ளே வந்தவர்.
தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் அமீர் தன் கதையை கூறினார். அப்போது, முன்னதாக தன் அம்மா கொலைசெய்யப்பட்டது பற்றியும், அதன் பின்னர் போலீஸ் ஸ்டேஷன் போனது பற்றியும் பேசிய அமீர், தன் வாழ்க்கையே தலைகீழாக மாறியது குறித்தும் பேசி எமோஷனல் ஆகி அழத் தொடங்கினார்.
அதன் பின்னர் பேசி அமீர், “அம்மா இறந்த பின்பு, வீட்டில் உள்ளவற்றை விற்று கிடைத்த பணத்தை அவரை அடக்கம் செய்தேன். பின்னர் ஆர்மியில் சேர வேண்டும், என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். அப்போது 2 நாள் கவர்மெண்ட் பஸ் ஸ்டாண்டில் தங்கி, படுத்து, அங்கு குளித்து, பிரஷ் பண்ணி வாழ்ந்தேன்.
பின்னர் பார்ட் டைமாக ஹோட்டல் ரூம் பாயாக 2009-ல் வேலை செய்தேன். அப்போது எனக்கு அவர்கள் ஒரு 10 ரூபாய் டிப்ஸாக கொடுத்தாலே பெரிதாக இருந்தது. என்னும் காலேஜ் படிக்க ஆசை, பின்னர் பார்ட் டைம் ஜாபை விட்டுவிட்டும் விட்டுட்டு டான்ஸ் கிளாஸ் போனேன்.
ஆனால் என்னிடம் ஒரு ஓட்டை ஷூ தான் இருந்தது. டான்ஸ் கிளாஸில் என் வியர்வையால் பெண்கள் என்னுடன் சேர்ந்து ஆட முன் வரமாட்டார்கள். எனக்கு ஒரு மாதிரி இருந்ததும் டான்ஸ் கிளாஸ் போவதை நிறுத்திக் கொண்டேன், எனினும் காலேஜில் நடந்த டான்ஸ் காம்படீஷனில் ஜெயித்தேன். பின்னர் ஊட்டியில் ஒரு மண்டபம் போன்றதொரு ஹாலில் ஒரு டான்ஸ் கிளாஸ் தொடங்கினேன்.
சென்னை வந்த பின்னர்தான் ஒரு டான்ஸ் கிளாஸ் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்தது. எனது டான்ஸ் கிளாஸில் வந்த இரண்டு குழந்தைகளுக்கு டான்ஸ் பயிற்றுவித்து, அவர்களை விஜய் டிவி கிங்ஸ் ஆஃப் டான்ஸ் ஜூனியர் நிகழ்ச்சியில் ஆடவைத்தேன். நாங்கள் வெற்றிபெறுவோம் என நினைக்கவில்லை. சின்ன லோக்கல் சேனலில் நான் வந்ததையே என் அம்மா ஊர் முழுக்க சொல்லி சந்தோஷப் படுவார், இப்போது தமிழ்நாட்டில் ஒரு முக்கிய சேனலில் வந்து நின்றிருக்கிறேன்.
இதை பார்க்க என் அம்மா இல்லை. நான் அவருக்காகவே இதையெல்லாம் சாதித்தேன் என நினைத்துக் கொள்கிறேன்” என்று அமீர் உருக்கமாக பேசினார்.