இளசுகளை கவர வரும் விஜய் டிவியின் ‘புதிய சேனல்’!!.. வெளியான செம டக்கரான ப்ரோமோ.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏறக்குறைய 90களின் பிற்பகுதியில் தமிழில் சாட்டிலைட் டிவி சேனல்கள் வளர்ச்சி அடைந்தன.

Advertising
>
Advertising

தற்போதைய காலங்களில் பல டிஜிட்டல் நிறுவனங்களில் இயங்கி வருகின்றன. சேனல்களைப் பொறுத்தவரை சாட்டிலைட் சேனல்களும் இயங்கி வருகின்றன. சாட்டிலைட் சேனல்களும் டிஜிட்டலில் தங்களுடைய தளத்தை வலுவாக நிறுவி இருக்கின்றன. எது எப்படி இருந்தாலும் வெகுஜன மக்கள் வீடுகளில் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தி விடவில்லை. என்னதான் ஸ்மார்ட் போன் யுகம் வந்தாலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்திலிருந்தும் தனித்துவமாக விளங்கி வருகின்றன.

தொலைக்காட்சிக்கான பிரத்தியேக நிகழ்ச்சிகள் அதற்கான வடிவமைப்புகள் என எல்லாமே இன்னும் அதற்குரிய பிரம்மாண்டத்துடன் இருப்பதை காண முடிகிறது. அந்த வகையில் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு சேனலாக தமிழகத்தில் பிரபலமான சேனல் விஜய் டிவி. தொடக்க காலத்தில் விஜய் டிவி என்கிற பெயரிலும் பிற்காலத்தில் ஸ்டார் விஜய் என்கிற பெயரிலும் வளர்ச்சி அடைந்த விஜய் டிவி, பின்னர் திரைப்படங்கள் மற்றும் த்ரோபேக் நிகழ்ச்சிகளுக்காக விஜய் சூப்பர், பாடல்களுக்காக விஜய் மியூசிக் ஆகிய உப சேனல்களை தொடங்கியது. இந்த சேனல்களுக்கும் பெரும் வரவேற்பு உண்டானது. இதனை அடுத்து தற்போது விஜய் டிவி புதிய சேனல் ஒன்றை தொடங்கியிருக்கிறது. இது தொடர்பான புதிய ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி இளைஞர்களை கவரும்படியான பல பிரத்தியேக, புதிய மற்றும் ட்ரெண்டிங்கான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி புதிய சேனலே உருவாகி வந்திருக்கிறது. அந்த சேனல்தான் விஜய் டக்கர். ஆம், விஜய் டக்கர் - இதுதான் ட்ரெண்ட் செட்டர் என்கிற டேக்லைனுடன் அறிமுகமாகி இருக்கும் விஜய் டக்கர் சேனலில் செலிபிரிட்டி நேர்காணல், இளைஞர்களுக்கான புதிய டாஸ்க்கள், போட்டிகள் நிறைந்த பல சுவாரசியமான நிகழ்ச்சிகள், இளைஞர்களை கவரக்கூடிய ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் தொடர்கள் என பலவும் வரவிருக்கின்றன.

இவை தொடர்பான ப்ரோமோக்கள் அடங்கிய இந்த சேனலின் அறிமுக புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இந்த சேனலின் நிகழ்ச்சிகளுக்காக இப்போதே ஆவலுடன் காத்திருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.

Star Vijay TV New youth entertainment Channel Vijay Takkar

People looking for online information on Vijay Takkar, Vijay Takkar Promo, Vijay TV New Channel, Vijay TV New Channel Vijay Takkar will find this news story useful.