'கண்ட நாள் முதல்', ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நடித்தவர் கார்த்திக்குமார். இவர் இந்திய அளவில் கவனிக்கத்தக்க ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் பிரபலமானவர்.

கார்த்திக்குமார் (44) சில வருடங்களுக்கு முன்பு பாடகி சுசித்ராவை கார்த்திக் திருமணம் செய்தார். இரண்டு வருடங்களுக்கு முன் முதல் மனைவி பாடகி சுசித்ராவை பிரிந்தார். இந்நிலையில் இவருக்கும் இளம் நடிகை அம்ருதா ஶ்ரீனிவாசனுக்கும் (28) நேற்று திருமணம் நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர். திருமணத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் திருமணத்தில் பங்கேற்ற நண்பர்கள் மூலம் வெளிவந்துள்ளன.
டிஜிட்டல் கிரியேட்டர் வினோதினி வைத்தியநாதன் மற்றும் நடிகை லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகிய நண்பர்கள் சமூக ஊடகங்களில் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நடிகை அம்ருதா ‘மேயாத மான்’, ‘தேவ்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும், லிவின் போன்ற சிலபல வெப்சீரிஸ்களிலும், லீகலி ரேப்ட் போன்ற சில பல குறும்படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கார்த்திக்குமார் இயக்குனராக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தில் நடிகை அம்ருதா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். K. பாக்யராஜ் மற்றும் ஊர்வசி முக்கிய வேடங்களில் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது.