பிக்பாஸ் வீட்டில், சக போட்டியாளர்களின் பெயர் ஒட்டப்பட்ட பொம்மையை எடுத்துக்கொண்டு கூடாரத்துக்குள் ஓடும் லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க் அரங்கேறியது.
இதில் எந்த போட்டியாளர் கடைசியாக, கூடாரத்துக்குள் வருகிறாரோ அவரருடைய கையில் இருக்கும் பொம்மைக்குரிய போட்டியாளர் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார். இதன் மூலம் ஒரு போட்டியாளர் நினைத்தால், சக போட்டியாளரை காப்பாற்றவும் முடியும், போட்டியில் இருந்து வெளியேற்றவும் முடியும்.
இதில் அண்ணாச்சியின் பெயர் போட்ட பொம்மையை எடுத்துச் சென்ற இசைவாணி கூடாரத்துக்குள் செல்லாததால், இதுகுறித்து பேசிய அண்ணாச்சி, “நீ முதுகுல குத்திட்ட..” என்று இசைவாணியை பார்த்து அனைவரது முன்னிலையிலும் கூற, அதற்கு இசைவாணி, “நான் முதுகுலலாம் குத்தல.. நான் குத்துறதா இருந்தா நேரடியாவே குத்துவேன்..” என்கிறார்.
இதனை பார்த்துக்கொண்டிருந்த ராஜூ, “சரி உனக்கு அவரையும், அவருக்கு உன்னையும் பிடிக்காதுங்குறது உலகத்துக்கே தெரியும்..” என்று கருத்து தெரிவிக்க, உடனே இசைவாணியும் அங்கிருந்த சிலரும் , “அவங்களுக்குள்ள ஒருவருக்கொருவர் பிடிக்கவில்லை என்பதை நீங்க சொல்லாதீங்க..” என்று ராஜூவிடம் குறிப்பிட்டனர்.
அதற்கு பதில் அளித்த இமான் அண்ணாச்சி, “சரி அப்படினா எதுக்காக என் பெயர் போட்ட பொம்மையுடன் நீ கூடாரத்துக்கு உள்ளே போகாமல், வெளியவே நின்னுட்டு இருந்த?” என கேட்கிறார். அண்ணாச்சிக்கும் இசைவாணிக்குமான உரசல் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
கடந்த நாமினேஷனில் ஒருவருக்கொருவர் நாமினேட் செய்து ஒருவர் புகைப்படத்தை ஒருவர் தீயிலிட்டு பொசுக்கிய சம்பவம் கூட அரங்கேறியது. இந்நிலையில் இவர்களின் உரசல் எப்போது பூதாகரமாக வெடிக்கப்போகிறது என்பது குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.