THALAPATHY66: போடு சக்க! விஜய் படத்தில் முதல் முறை இணைந்த பிரல இசையமைப்பாளர்…

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி 66 படத்தின் இசையமைப்பாளராக அதிகாரப்பூர்வமாக எஸ் எஸ் தமன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertising
>
Advertising

KGF 2 அடுத்த சிங்கிள் ‘அகிலம் நீ’…. உருக்கமான அம்மா பாட்டு ரெடி – வெளியான தரமான அப்டேட்!

பீஸ்ட் ரிலீஸ் எதிர்பார்ப்பு

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த நெல்சனும் மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய்யும் இணைந்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் பேன் இந்தியா ரிலீஸாக வெளியாகிறது.  இந்த படத்தில்  பூஜா ஹெக்டே, யோகி பாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே,  செல்வராகவன், விடிவி கணேஷ் மற்றும் அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஜய்யின் சமீபகால படங்களின் வெற்றியால் பீஸ்ட் படத்தின் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது.

தளபதி 66….

பீஸ்ட் படத்துக்கு அடுத்து விஜய் தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில் ‘தளபதி 66’ என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை தோழா படத்தின் இயக்குனர் வம்சி இயக்குகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் இயக்குனர் வம்சியோடு விஜய் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது.

கதாநாயகியாக ராஷ்மிகா….

இந்த படத்தில் விஜய்யைத் தவிர மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய எந்த விவரமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தான் தளபதி 66 படத்தின் கதாநாயகி ராஷ்மிகாதான் என்று அதிகாரப்பூர்வமாக இன்று காலை அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்தது.

முதல் முறையாக விஜய்யோடு…

இந்நிலையில் தற்போது தளபதி 66 படத்தின் இசையமைப்பாளராக எஸ் எஸ் தமன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். தமன் பாய்ஸ் படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர். அதன் பிறகு இசையமைப்பாளராக தமிழ் மற்றும் தெலுங்கில் 100 படங்களுக்கு மேல் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.  இதையடுத்து தற்போது முன்னணி நடிகரான விஜய்யின் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர்கள் இருவரும் இணையும் முதல் படமாக தளபதி 66 அமைய உள்ளது.

விரைவில் படத்தில் பணியாற்றும் கலைஞர்களைப் பற்றிய விவரங்களை அடுத்தடுத்து தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

SS thaman is the music director of thalapathy 66 official

People looking for online information on Rashmika Mandanna, SS Thaman, Thalapathi 66 movie, Thalapathy Vijay, Thalapathy66, Vijay will find this news story useful.